கற்றது கையளவு

கருவிலிருக்கும் போதே கற்றுக் கொள்கிறோம் கால்பந்து விளையாடுவது எப்படியென்று ;
கல்விச்சாலையில் கற்றுக் கொள்கிறோம் கண்டிப்பு என்றால் என்னவென்று ;
தாயிடம் கற்றுக் கொள்கிறோம் நிர்வாகப் பொறுப்பினைப் பற்றி ;
தனிமைதனைக் கற்றுக் கொள்கிறோம் கல்லூரிக் காலத்தில் ;
வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருந்தால் வாழும் வரை கற்க்கலாம்;
மனிதர்களின் மனங்களை படித்தால் மார்க்கம் உண்டு அனைத்திற்கும் ;
கற்றது கைமண்ணளவாக இருப்பினும் கற்றுவித்தல் சிறக்க வேண்டும் .

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (8-Jul-17, 10:50 pm)
சேர்த்தது : Karthika Pandian
Tanglish : katrathu kaiyalavu
பார்வை : 217

மேலே