யுத்தம் உள்ள பூமி வேண்டும்
ஸ்ரீ ராமன் திருத்தலத்தை
மொகலாயர் அபகரித்தது போல்
சிவ கைலாயத்தை
சீனர்கள் ஆக்கிரமித்தார்:
தாயின் காஷ்மீரப் பூக்கொண்டையை
பாகிஸ்தான் பிடித்திழுக்க ,
வங்காள வாசல்களில்
வல்லூறுகள் நுழைகிறது:
பாதங்களின் கீழே
பன்னாட்டுச் சதி வலைகள்:
பாரத மண்ணுக்குள்ளேயே
பல குட்டிப் பாகிஸ்தான்கள் ..!
இன்று..
சிக்கிம், இமாச்சல எல்லைகளில்
சீனர்களின் அடாவடிகள் :
புற்றுநோய் போல் தேசமெங்கும் பரவிய
அந்த
மஞ்சள் மனிதர்களின் வணிகங்கள்..
இதை ,
மறுக்க மனமில்லை ..
ஏனெனில்
மானம் நமக்கில்லை ..
சொந்த தேசத்து அகதிகள்- நாம்
---சிறகுள்ள கைதிகள்..!
அந்திமக் கனவுகளில்
--சரிந்து போயின
நம்
--நேற்றின் ராகங்கள்
நைந்த நினைவுகளின்
--நதிக்கரையோரம்
கண்ணீரை யழுகின்ற
---இன்றின் பொழுதுகள்
இந்த வானம்
---சிவக்காத வரையில்
இனி ஒரு மகாயுத்தம்
---நடக்காத வரையில்,
மண்ணுக்குள்ளேயே
மரித்துப் போகும்
---நாளையின் விதைகள் !
***