கிறுக்கி

சோகம் தோய்ந்த முகம்
சுருக்கிடச் சொல்லும் மனம்

மனதின் வலியை வார்த்தையாய்க் கோர்த்து
கண்ணீராய் உன் கால் கொட்ட

மதியாது போகாதே கிறுக்கி
மனம் மரித்து போகுதடி

தினம் பார்க்கவே கேட்டேன்
அக்கணமே ஒளிந்து கொண்டாய்

கரம் பற்ற கேட்டேன்
காணாது போனாய்

அரைத்திங்கள் மட்டும் முழுமதியாய் வந்து
அடுத்த பாதி தேய்பிறையாய் எனைத் தேய்த்துப் போனாய்

இதயத்தை கிழித்து குருதிச் சகதியில் குளிப்பாட்டி
புதைத்தும் போதாதென எடுத்து

நடுஇரவில் நரிகூட தூங்கும் நேரம்
என் நரம்பினிலே தீ வைத்து

நற்சாம்பல் கண்ட பின்னே
நீ தூங்கச் சென்றாய் பெண்ணே..

"கிறுக்கி" இந்தக் "கிறுக்கன்" அன்றும்கூட உனக்காக..

#கரிசல்மகன்

எழுதியவர் : சிவக்குமார்-"கரிசல்மகன்" (9-Jul-17, 11:32 am)
Tanglish : kirukki
பார்வை : 215

மேலே