என்னைப் பெற்றவளே என் தாயே
என்னை ஆழ்பவளே என் நெஞ்சில் வாழ்பவளே
கண்ணைப் போல் என்னைக் காப்பவளே
கார்முகிலாய்ப் பெய்து கவலை தீர்ப்பவளே
பாருலகில் நான் வாழும் பாக்கியம் செய்தவளே
என் வாழ்வு சிறக்க வகை செய்தவளே
தாயே என்னம்மா உன் காலடி தொழுதேன்
இவ்வாறே என்னோடு நீ இருந்தால் போதும்
உன்னாசி எப்போதும் எனக்கிருந்தால் அது போதும்
ஆக்கம்
அஷ்ரப் அலி