தாயின் மகனாக

தாய் அன்பின் தனித்துவம்
தன்னலம் இல்லா இறைவரம்....

ஆயிரம் உறவுகளை தந்த உலகம்
தாயின் அன்பின் நிழலை கூட
தொட்டுவிட முடியவில்லை.......

தோளுயர்ந்த பிள்ளைகள்
எனக்கிருந்த போதும் சிறு பிள்ளையில்
நான் உணர்ந்த அன்பை அளவு குறையாது
இன்றும் உணருகிறேன்.....

தானாக நான் வளர்ந்த போதிலும்
தான் யாவுமாய் காப்பதால் தான்
தாய் என பெயர் கொண்டாலோ.....

நான் நானாகவே இருக்கிறேன்
தாயின் மகனாக........

🌺🌸🌹🌺🌹Samsu🌹🌺🌹🌸🌺

எழுதியவர் : samsu (10-Jul-17, 1:24 pm)
Tanglish : thaayin maganaga
பார்வை : 277

மேலே