காதல்
காதல் என்ற மூன்றெழுத்தை
கண்டு சொன்ன கடவுள் யார்?
மந்திர வித்தை கொண்டிந்த
சொல்லை செய்த சிற்பி யார்?
சீறும் புலியாய் இருந்தவர்கள்
பெட்டிப்பாம்பாய் போன கதையென்ன !
கையால் எழுதா, காதால் கேளா
வாயால் பேசா மொழி இதுவே
இரு இதயம் மட்டும் பேசுகின்ற
கடவுள் தந்த அன்பு மொழி
ஒன்றை ஒன்று விட்டகலா
ஈர் உயிர்கள் சேர்ந்து கட்டுகின்ற
அன்பு என்னும் ஆலயத்தின்
அர்ச்சனை மந்திரம் காதல் மொழி
எத்தனை ஆண்டு, எத்தனை தூரம்
எத்தனை ஜென்மம் பிரிந்திருந்தும்
அத்தனை நாளும் என்னிதயம்
உன்னை நினைத்துக் கவிபாடும்
அன்பில் பிறந்த நட்பு இது
பண்பில் வளர்ந்த காதல் இது
எத்தனை தடைகள் வந்தாலும்
தூள் தூளாக உடைத்தெறியும்
காமம் தேடும் உலகத்தில்
உன் காதல் தேடி நான் வந்தேன்
உடலை ரசிக்கும் கூட்டத்தில்
உன் மனதை ரசிக்க நான் வந்தேன்
எங்கோ பிறந்தோம், எங்கோ வளர்ந்தோம்
இத்தனை நாளும் அறியாமல்
குருடர் போல வாழ்ந்துவிட்டோம்
இனி இருள்கள் அகலும் கவலை விடு
உலகம் எங்கள் காலடியில்
நாளைய பொழுது நம் கையில்
வாழ்க்கை என்னும் புத்தகத்தை
படித்துப் பார்க்க புறப்படுவாய்
கவலை தோய்ந்த மனிதர்கள்
கனவாய் போன கதையறிவாய்
சரித்திரத்தின் பக்கங்களில் எம்
பெயர் பதிக்க எழுந்து வா!!!

