தயக்கமென்ன தலைவியே

கூரிய விழிகளும் குழலின் அழகும்
சிவந்த இதழும் சிந்தும் புன்னகையும்
மலர்ந்த முகமும் மயக்கும் குரலும்
என்னை உன்னிடம் ஈர்த்தது பெண்ணே!

கூரிய விழிகளால் கைது செய்கிறாய்
குறுநகை புரிந்து மயங்க வைக்கிறாய்
கண்ணில் கருத்தில் கனவில் நிறைகிறாய்
கலங்க வைக்கிறாய் காதலை மறைக்கிறாய்

காதல் கொண்டு கற்பனையை வளர்த்தேனே
கற்பனையில் மூழ்கி கவிதைகள் புனைந்தேனே
மோகத்தில் நான் பாடும் மோகனமே
நீ பிரிந்தால் ஏங்கிடும் என் மனமே

மங்கை நீ அருகில் இருந்தாலும்
மெளனத்தால் ஏனடி என்னை வாட்டுகிறாய்?
நெஞ்சுக்குள் வந்து ஆட்சி செய்தாலும்
அருகில் வந்தால் ஏனடி நாணுகிறாய்?

தயக்கத்தை விட்டுவிடுத் தலைவியே
உன் காதலை என்னிடம் சொல்லிவிடு
என்னுடன் வந்து இணைந்துவிடு
உயிரோடு உயிராக கலந்துவிடு

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (16-Jul-17, 6:20 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 103

மேலே