இன்னும் எத்தனை நாள்?
💟❣️💟❣️💟❣️💟❣️💟❣️💟
*இன்னும்*
*எத்தனை நாள்?*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
💟❣️💟❣️💟❣️💟❣️💟❣️💟
உன் ஓரவிழிப் பார்வையிலே!
என் உயிருக்குள் நுழைந்தாயே!
கள்ளழகு சிரிப்பினிலே!
என் கனவுகள் விழுந்தாயே !
உணவு உண்டு
பசியாற்றிய நான்
உன் முகம் கண்டு
பசியாறுகிறேன்......
இசை கேட்டு
துயில் கொண்ட நான்...
உன் மொழி கேட்டு
இமை மூடுகிறேன்...
தள்ளி நின்று
ரசிக்கையிலே
உயிருக்குள் தாகம் எடுக்கிறதே!
எட்டி நின்று
உரையாடுகையிலே!
உடம்புக்குள்
உதிரம் உறைகிறதே....!
திரும்பி திரும்பி
நீ பார்த்துப் போகையில்
என் மனம்
விரும்பி விரும்பி
உன்னைப் பார்க்கிறதே..!.
உன் பாதம் போகும்
பாதை தானே
என் வாழ்க்கை போகும்
பாதையானதே....!
கதிரவன் கண்டு
தாமரை மலரும்
இன்று
தாமரை கண்டு
கதிரவன் மலர்கிறதே..... !
நிலவை கண்டு
அல்லி பூக்கும்
உன் வருகை கண்டு
என் சுகம் பூக்கிறதே....!
நான் சொல்வேன் என்று
நீயும்......
நீ சொல்வாய் என்று
நானும்.....
காத்திருக்க வேண்டிய
நாட்கள் தான்
நம் காதலுக்கு எத்தனையோ....?
*கவிதை ரசிகன்*
💟❣️💟❣️💟❣️💟❣️💟❣️💟