சூழ்நிலையின் உயிர்ப்பு
சூழ்நிலையின் உயிர்ப்பு
மேகத்தின் கூட்டமொன்று
சூரியனை மறைத்து
அந்த இடத்தின் மீது
படர்ந்து நகர்ந்து செல்ல
அங்கு விழுந்த
நிழலுக்கு..!
இருளாகிவிட்டதோ?
மயங்கிய பறவைகள்
அப்பொழுது வரை
உயிர்ப்பு இருந்த
சூழ்நிலையை விட்டு
கூடுகளுக்குள்ளும்
பொந்துகளுக்குள்ளும்
அவசரமாய் இடம்
பெயர துவங்கி விட்டன
மேக கூட்டம்
கடந்து சென்ற பின்
தொடர்ந்து வீசிய
வெப்ப அலைகள்
பூமியை
மீண்டும் தாக்க
வெட்கிய பறவைகள்
மீண்டும் சப்தமிட்டு
அந்த இடத்தில்
அங்கும் இங்குமாக
பறந்து
மீண்டும் சூழ்நிலையை
உயிர் கொடுக்க
ஆரம்பித்து விட்டது