வளம் பெருக்க வா மழையே

#வளம் பெருக்க வா மழையே..!

கஞ்சத்தனம் செய்குதிந்த வான்மழை
களிப்பிலாழ்த்தக்
கொட்டிடுமா
பேய்மழை..!

விட்டுவிட்டுத் தூறுவதால் வெட்கையே
வியர்வையினைக்
கூட்டஉடல் மட்டையே..!

மப்புவானம் நித்தம்பூசை போடுதே
மாயங்காட்டி மேகக்கூட்டம் ஓடுதே..!

இன்றுவரும் நாளைவரும் ஏக்கந்தான்
இடர்ப்பாட்டை என்றுமழை
போக்குந்தான்..!

இடியிடித்து சிரிக்குதடா வானமும்
இளித்துப்பல்லைக் காட்டுதடா மின்னலும்..!

கொட்டும்மழை
பாயவேணும்
ஊரிலே
கொஞ்சியதைப்
பாடவேணும்
பாவிலே..!

வழியிலெங்கும் நிற்காது வருகவே
வளம்பெறத்தான் வரங்களைநீ தருகவே..!

சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (27-Jun-24, 4:29 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 7

சிறந்த கவிதைகள்

மேலே