அம்மா

. அம்மா
👩‍🍼👩‍🍼👩‍🍼👩‍🍼👩‍🍼👩‍🍼👩‍🍼👩‍🍼👩‍🍼👩‍🍼👩‍🍼👩‍🍼👩‍🍼👩‍🍼👩‍🍼👩‍🍼
உசுரையும் உருவத்தையும் - உன்
உதிரத்தில் கொடுத்து விட்டாய் !
அம்மா...
வயிற்றுக்குள் நான் பாரமானேன் - என்
தொப்புள் கொடி அறுத்து விட்டாய் !
படுத்து நான் உறங்க - எனக்குப்
பழஞ்சீலைத் தொட்டிலிட்டாய் !
பசியறிந்து தாய்ப்பாலை - நான்
பருகும் வரை அருந்த விட்டாய் !
அழகழகாய்த் தாலாட்டில் - என்
ஆசைகளைத் தீர்த்து விட்டாய் !
அழும்போது என் தலை சுத்தி - எரியும்
அடுப்பினிலும் உப்பிட்டாய் !
முந்தானையைப் பிடித்தபடி - உன்
மூச்சுக் காற்றில் உலவ விட்டாய் !
சந்தோஷம் மாறாமல் - என்னை
ஐந்தாண்டும் வளர்த்து விட்டாய் !
இக்கத்திலும் தோள் மீதும் - எனக்கு
இருக்கை எல்லாம் கொடுத்து விட்டு
இன்று....
பள்ளிக்கு என்னைப் பிரித்தனுப்பி - அம்மா நம்
பாசத்துக்கு ஏன் கொல்லி வைத்தாய் !
🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

எழுதியவர் : க. செல்வராசு (28-Jun-24, 1:00 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : amma
பார்வை : 26

மேலே