தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 16--- முஹம்மத் ஸர்பான்

151.நான் தயாரித்த காகிதக் கப்பல்கள்
வெள்ளத்தில் மூழ்கி தங்கமீன்களானது

152.மெழுகின் வெளிச்சம் இருளை கொன்று
மின்மினிகளை காப்பதாய் நம்புகின்றது

153.நரம்பின் வழியே ஓடும் உதிரம்
இறைவன் உயிரில் ஊற்றிய திரவம்

154.சிந்து நதியில் ஒதுங்கிய சடலங்கள்
மறைக்கப்பட்ட வரலாற்றுக் கறைகள்

155.பிணங்கள் புதைக்கப்பட்ட தோட்டத்தில்
கறுப்புப் பணங்கள் உயிர் வாழ்கின்றது

156.நடுநிசியில் மலர்கின்ற அற்புதப்பூக்களுக்கு
தெருவிளக்குகளின் வெளிச்சம் விற்றமீன்

157.தூண்டிலில் பிடிபட்ட மீன்களின் மெளனம்
கண்கட்டப்பட்ட நீதி தேவதைக்குச் சாபம்

158.சலவை செய்யப்பட்ட பருத்தி நூலில்
நதியின் கடந்த கால வரலாறுகள் ஒளிந்துள்ளது

159.அன்னை ஊட்டிய முலைப்பாலின் வாசம்
என் சுவாசக் காற்றை அலங்கரிக்கின்றது

160.நச்சுப்பாம்பின் மூச்சுக் காற்றில்
கல்லறைக் கதவுகள் காக்கப்படுகிறது

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (21-Jul-17, 8:22 pm)
பார்வை : 171

புதிய படைப்புகள்

மேலே