ஆணும் நிலவும்

நிலவும் ஆணும்
என்னவனே
என் மீது
காதல் கொள்ள
மாட்டீரோ!
என் இதயத்தை
கொள்ளை கொண்ட
கள்வனே
நின்
ஒளியின் நிழல்
அது
நதியில்
விழுந்தால்
நீர் அள்ள வரும்
நங்கைகளின்
மனம் ஏங்கிடுமே
உன்னை மணம் முடிக்க...
நின்
ஒளியின் நிழல்
அது
குளத்தில்
விழுந்தால்
அங்குள்ள
தாமரையும்
காதல் மயக்கம்
கொண்டிடுமே
கண்ணாளனை அடைய..!
என்றும் என்னுள்
புதைந்து இருக்கும்
சுகத்தை
ஏங்கடும்
மேகம் நான்!
நிலவே
நீ
எனக்கு மட்டும்
சொந்தம்
இந்த வானில்!