உனக்கான தேடல்
அவனோடு தொலைந்த
என் மூச்சுக்காற்றை
தேடி அலைகிறேன்...
அவன் பார்வையில்
பறிபோன என் பருவத்தை
எங்கும் காண அலைகிறேன்...
ஒளித்து வைத்திருக்கிறான் அவனுள்
விட்டுக்கொடுப்பின்றி ஒருவருக்கும்...
பரந்த உலகில் என்னை
அவனுக்கான தேடலில் மட்டுமே
தொலைத்துவிட்டான்!..