கதிரோன்,நிலவு,காதலி நான்

' காலையின் ஒளியெல்லாம்
நீயானாய் கதிரோனே,
நீ ஒளி தந்த சந்திரனோ,
இரவின் ஒளி ஆனான் ;
குளிர்தரும் ஒரே ஒளியும்
அவனே ஆவான் '
என்று நீ கூறுகிறாய் என்னவனே ,
என்னவனே நீ எந்தன் கதிரவன்
என்று நான் கூறியபோதெல்லாம்,
' வளர்மதி நீ தானே' என்று
என்னை அழைத்தாய் ;
இப்போது அறிந்தேன்
உன் உள்ளத்தில் எந்த
உயர இடத்தில் உள்ளேன்
நான் என்பதை,

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Jul-17, 8:43 pm)
பார்வை : 92

மேலே