அறிவுக்களமே அப்துல் கலாம்

தீவினுள் முளைத்த
அக்னிச் சிறகே!
அறிவுக் களமே!

உலகின் காலச் சக்கரத்தில்
ஓயாத கடிகாரம் நீர்!
ஓய்ந்த சமுதாயத்தை
மாணவத் தூண்களால்
தூக்கி நிறுத்தியவர் நீர்!
மனங்களை வென்ற
மதங்களை கடந்த
மகாத்மா நீர்!

நகர முடியாத பிஞ்சுகளின்
நிழலாய்ப் போன கனவுகளில்
சிறகு கட்டி நனவாக்கியவர் நீர்!
விண்கலம் ஏறி விண்முட்டச் செய்த
ஏவுகணையின் தந்தை நீர்!

தண்ணீரின் நடுவிலும்
உம்புகழ் தீயாய் பரவிடும்
எளிமையின் சிகரம் நீர்!
குழந்தையின் சிரிப்பிலும்
மாணவர்களின் சக்தியிலும்
புதுசமுதாயம் படைத்த சிற்பி நீர்!

தன்னலம் தவிர்த்து
தரணியில் உயர்ந்து
மதங்களை மதித்து
பிரிவினை ஒளித்தீரே ...
அறிவியல் ஆக்கத்தின் அறிவுக்களமே
காலம் வென்ற கலாம்!

தூங்காமல் படிக்கச் சொல்லும்
பெற்றோரின் அன்புக்கனவுகள் மத்தியில்
என்னைக் கனவு காண வைத்த
என் செல்லத் தந்தையே
உன் பிள்ளையின்
கண்ணீர் வரிகள்....

வாங்கும் மூச்சும்
நிற்கும் வரை இல்லை....
அதிகாலைச் சூரியன்
அடங்கும் வரை இல்லை...

வருங்கலாம் வல்லரசாகும் வரை...
கலாமின் கனவு நிஜமாகும் வரை...

ஏணிமட்டுமே வேண்டாம்
ஏவுகணை ஏறி
வெற்றியை ஆட்சி செய்வோம்!!!

எழுதியவர் : நிலா (28-Jul-17, 9:14 pm)
பார்வை : 95

மேலே