என் அன்னையின் மடியில் நீயும் ஓர் கைக்குழந்தை

பெற்றடுக்காத என் அன்னைக்கு-மடியில் தவழும்
நீயும் ஓர் கைக்குழந்தை.
என் அன்னையின் முத்தத்தை உன் கன்னங்களில் வாங்குகிறாய் ,
கடன் கொடுத்தும் என்னை காதலோடு பேசவைக்கிறாய்
நான் களைத்திருக்கும்போது விளையாடச்சொல்கிறாய்
நான் மௌனமாகும்போது செய்தி அனுப்ப சொல்கிறாய்
காதலால் உன்னை நான் உறங்கும் போது
நெஞ்சோடு நெஞ்சாக வைக்கச்சொல்கிறாய்
பகலெல்லாம் என் காதோடு நீ
காதாக இருக்கிறாய் .
நீ மரணத்தின் வாசல் செல்லும் முன்
நான் மடிந்து விடுகிறேன் .

எழுதியவர் : (28-Jul-17, 8:43 pm)
சேர்த்தது : kavitha
பார்வை : 103

மேலே