உள்ளமே உனக்கு தான்
நான் கல்லானால்
நீ சிலை
நான் சொல்லானால்
நீ புதுகவிதை...
நான் புல்லானால்
நீ பனித்துளி
நான் மண்ணானால்
நீ மரம்...
நான் கண்ணானால்
நீ காட்சி
நான் வின்னானால்
நீ முழுமதி...
நான் தாயானால்
நீ என் சேய்
நான் காற்றானால்
நீ சுவாசம்...
நான் நீரானால்
நீ வேர்
நான் மனமானால்
நீ எண்ணம்...
நான் உடலானால்
நீ உயிர்
நான் கடலானால்
நீ அலை...
நான் மலரானால்
நீ தேன்
நான் கொடியானால்
நீ கிளை...
நான் என்னவானால்
நீ என்னவளாக...