ஆட்டுவிக்கும் ஆடிக்காற்று

நறுமண நளினத்தில் நலிந்துவிட்ட நவரசமெல்லாம் நரகத்தில்சேர
நரசிம்மனும் நயவஞ்சக நண்பனோடு நந்தவனத்தில் நயமுடன் நடித்து நடைபோட...
நாணியவாறே நாற்றுச்செடிகள் நாதியற்று நாரதனின் நாசிவரை
நாடியிருக்க
நாணயமில்லா நான்மட்டும் நாயகனாகவா நாடாளப்போகிறேன்...
நினைவுமறவா நிழற்படம் நிகழ்ந்தகதையினை நிழலாடி நிருபிக்க
நிறைவுபெறாது நித்தம் நிகழவா நிலம்புதைந்து நித்திரைகொண்டேன்...
நீராவிகோர்த்த நீள்வட்ட நீர்குளத்தில் நீண்டகாலமாக நீந்தியவனை
நீதிமன்றத்தில் நீக்கிவைத்து நீங்காதுயரினை நீட்டித்ததே நீதானே...!
( ஆடிப் பட்டம் தேடி விதை )