முதல்
திருக்குறள்
''''''''''''''''''''''''''''''''''''
அறத்துப்பால்
...............................
கடவுள் வாழ்த்து
குறள்1
.................................
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
கவிதையாய் பொருள்
...............................................
எழுத்துகளில் முதலென்று
எம்மொழியில் உயர்வென்று
உதட்டளவில் இல்லாமல்
உள்ளொலியில் உச்சரித்தே
"அ"கரமாக வெளிப்பட்ட
அமுதவடிவு போலவே
அகிலம் முழுதும்
அனைத்து உயிர்களும்
ஆதி பகவனை முதலாய் கொள்ளும்
அதுவே வள்ளுவன் குறட்பொருள்.