மகளல்ல தாய்

மகளல்ல தாய் . . .
புலரியின் மடி புலர்ந்த
சிவந்த கீழ்வானமாய்
என் மடிசாய்ந்த
அவள் பொழுதுகளின்
சாயல்கள் . . .
சலனமில்லா
நதிமீது
சிதறலிலா
பிம்பம் பதித்து
மிதந்தோடும்
பவுர்ணமி நிலவாய்
மனதின் அலையில்
அவளின் முக்ம் . . .
அவள் பிஞ்சு விரலின்
தீண்டல்கள்
பிரசவிக்கின்றன
மறுபடியும்
என் அன்னையை . . .
அவள் சிந்திய
மழலையின் மொழிகளை
மடி அள்ளி
மெளனிக்கின்றேன்
வாய்மொழி
தொலைத்தவனாய் . . .
அவள் பாதச்சுவடுகளை
இந்நாள் வரை
கண்டிரா ஓவியமாய்
தன்னுள் புதைக்கின்றாள்
நிலமகளும்
பொக்கிசமாய் . . .
அவளது குறும்புகள்
வடமிட்டு இழுக்கின்றன
எனைக்கடந்து போன
இளமைக் காலத்தை . . .
அவளது நினைவுகளில்
சிக்குண்ட மனது
தொலைத்த எனை
தேடுகிறது . . .
அவளை ஈன்ற
நாள்முதலாய் . . .
சு.உமாதேவி