உறுதிமொழி
இறைவன்
வரைந்த ஒவியம்
மரணமும் பிறப்பும்.
தாய்
இயற்றிய கவி
அன்பும் அரவணைப்பும்.
தந்தை
கூறிய கருத்து
வீரமும் பணிவும்.
அண்ணன்
சொன்ன வார்த்தை
கடமையும் பொறுப்பும்.
அக்காள்
கண்ணீர் பேசியது
பிரிவும் வேதனையும்..
நான்
நானாக நின்று
நேர்மையும் உழைப்பும்.