நாம் யார்
மேய்ப்பனொருவன் வருவானென்று எதிர்பார்த்து வாழ்வைக் கழிக்கும் ஆட்டுமந்தையா நாம்?
சீர்மிகு பகுத்தறிவின் துணை கொண்டு தனக்கு தானே மேய்ப்பனையும் கொண்ட மனிதக்கூட்டமே நாம்...
வேட்டையாடி உண்ணும் ஐந்தறிவு மிருகக் கூட்டமா நாம்?
விவசாயம் செய்து உணவை உண்டாக்கி உண்ணும் மனிதக்கூட்டமே நாம்...
உயிர் பறிக்கும் விஷமரமா நாம்?
நோய் தீர்த்து உயிர் கொடுக்கும் வேப்பமரமே நாம்...
சமயத்திற்கு தக்க நிறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்திகளா நாம்?
எந்த நிலையிலும் சத்தியமும், உண்மையும் உயிரோடு கலந்த மனிதக்கூட்டமே நாம்...
அளவுக்குமீறிய அற்ப ஆசைகளுக்காக அடித்துக் கொள்ளும் காட்டுமிராண்டி கூட்டமா நாம்?
இருப்பதைப் பகிர்ந்து அன்போடு ஆனந்தமாய் வாழும் மனிதக்கூட்டமே நாம்...
இயற்கையின்றி நாம் இல்லை...
நம்மோடு சேர்ந்தே இயற்கை முழுமையடைகிறது...
இயற்கை அழித்து நாம் வாழ்வதா?
செயற்கையிலே நாம் மூழ்கிப் போவதா?
நம் கடமையை நாம் மறப்பதோ?
சுயநலத்தாலே ஆடம்பரம் கொண்டு ஆரோக்கியத்தை அழிப்பதோ?
எத்தனை கேள்விகள் தொடுப்பினும் சிந்திப்பதே இல்லை நாம்...
சிந்திக்கும் திறமை வளராததாலேயே பழியுணர்ச்சிக்கும், வெறியுணர்ச்சிக்கும் இன்னும் அடிமைகளாய் இருக்கிறோம் நாம்...