தினசரி வேலைகள்...
காலைத் தூக்கத்தில்
கட்டி அணைக்கும் தலையணையும்
கொட்டாவியோடு நெட்டி முறிக்க
சடசடக்கும் எலும்புகளும்
குளியலறை சூடு தாங்காமல்
ஆவி மூடிய கண்ணாடியும்
பொங்கல் வடை சட்னி சாம்பார் மீது
துளி விடும் நெய்யும்
மிடறு விழுங்கும் போது
சூடேற்றும் தேநீரும்
அக்கடா என்று நீட்டி நிமிர்ந்து
சுடச்சுடப் படிக்கும் நாளிதழும்
கூக்கூ சத்தத்தினூடே
கிக்கீ கிளிகளின் கீச்சு மூச்சுகளில்
மைனா துரத்தும் காக்காக்களைத்
துரத்தி விளையாடும்
சோம்பேறிகளின் மதியத் தூக்கத்தின்
ஈடில்லா இனிய கீதை...