எப்படி மறப்பேன்
கை கோர்த்து நடக்கவில்லை...
கனவில் நாம் நடந்த தூரங்கள் கணக்கே இல்லை....
அதிகமாய் நாம் பேசவில்லை....
தனிமையில் உன்னிடம் பேசாத வார்த்தைகள் ஒன்றும் இல்லை...
நாம் பார்த்து கொள்ளவில்லை...
உன்னை காணாத நாள்கள் என்னிடம் இல்லை....
சேர்ந்து சென்ற இடம் இல்லை...
உன் நினைவின்றி நான் எங்கும் செல்லவில்லை....
உன் உலகில் நான் இல்லை...
என் உலகம் நீ இன்றி வேறில்லை..
கனவெல்லாம் நினைவாக கை கொடுத்தாய் ஒரு நாள்..
இமைகள் நான் திறக்கும் முன்னே எங்கே சென்றாய்...
வழி தடங்களை விட்டு சென்ற நீ..
என் வலி உணராமல் , வழியும் கூறாமல் சென்று விட்டாய்...
எப்படி மறப்பேன் என் உணர்வே உன்னை.....