கண்ட நாள் முதலாய்-பகுதி-17

......கண்ட நாள் முதலாய்.....

பகுதி : 17

அந்த கல்யாண மண்டபத்தில் அனைவருமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்...மணமகளுக்கான அறையில் துளசிக்கான அலங்காரங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன...இன்னும் சிறிது நேரத்தில் அவள் திருமதி ஆகப்போகிறாள்...இன்றிலிருந்து அவள் அரவிந்தனுக்குரியவளாகப் போகிறாள்...ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது கூட துளசியின் முகத்தில் இல்லை...எதையோ இழந்தவள் போலவே அவள் காணப்பட்டாள்...

அன்று அரவிந்தனின் ஊர்க் கோயிலுக்கு சென்று வந்ததிலிருந்து அவள் மேலும் குழம்பிப் போயிருந்தாள்...அடுத்தடுத்து வந்த நாட்களில் அனைத்து சடங்கு சம்பிரதாயங்களுமே மிகவும் வேகமாகவே இடம்பெற்று முடிந்தது...அன்றைய நாளின் பின் துளசிக்கும் அரவிந்தனை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை...அதிலிருந்து அவள் தப்பித்திருந்தாலும்...அவள் மனம் ஒருநிலையிலின்றி தவித்துக் கொண்டேயிருந்தது...அவளது முகவாட்டத்தை கலைவாணி கவனித்திருந்தாலும் குடும்பத்தை பிரியும் சோகத்தில் இருக்கிறாள் என நினைத்து ஒரு சில அறிவுரைகளைச் சொன்னதோடு அவரும் அதன் பின் அவளை தொந்தரவு செய்யவில்லை...அனைவரும் அவ்வாறே நினைத்து அவளை ஒன்றும் கேட்காதது துளசிக்கும் வசதியாகிப் போனது...

ஆனால் அந்த சந்திப்பின் பின் அந்தக் கல்யாணம் எந்தத் தடங்கலும் இல்லாமல் நடைபெற வேண்டுமென அரவிந்தன்தான் தினமும் கடவுளை வேண்டிக்கொண்டான்...அவன் மனதின் ஓரமாய் துளசிக்கு தன்னை பிடிக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுந்திருந்தது...அதை அவன் அவள் வாய்மூலமாகவே தெளிவுபடுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பம் அதன் பின் அமையாததால் அவன் உள்ளூரக் கொஞ்சம் பயந்துதான் போயிருந்தான்...

மணமகனுக்குரிய அறையில் அங்குமிங்குமாய் நடந்து கொண்டிருந்த அரவிந்தை கைப்பேசியின் ஓசை தடுத்து நிறுத்தியது...மறுபக்கத்தில் ஹலோ என்றதுதான் தாமதம் அவனை ஒரு வழி பண்ணிவிட்டான் அரவிந்...

"டேய் அர்ஜீன் எங்கடா இருக்காய்??நேத்து ஈவினிங் வந்திடுவேன்னு சொன்னாய்...உன் லைனும் கிடைக்கல...இன்னைக்குத்தான்டா கல்யாணம்...ஞாபகமிருக்கா?இல்லையா?"

"என்னையும் கொஞ்சம் பேச விடுடா...ப்ளைட் கொஞ்சம் டிலேய் ஆயிட்டுதடா...அதனால கடைசி ரெயினுக்குத்தான் டிக்கெட் கிடைச்சிது...சிக்னல் கிடைக்காததில இன்போர்ம் பண்ண முடியல...சொரிடா...இன்னும் ஒரு மணித்தியாலத்தில அங்க வந்திடுவன்..."

"சரி டா...இங்க காலையிலிருந்து எல்லோருமே உன்னைத்தான் கேட்டிட்டு இருக்காங்க...சீக்கிரமா வாடா.."

"இதோ வந்திட்டே இருக்கான்னு சொல்லு..."

"சரிடா....சரி...வந்திட்டு கோல் பண்ணு...."

"ஓகேடா...பாய்.."

அர்ஜீனோடு கதைத்து முடிக்கவும் அவனை ஐயர் அழைக்கவுமே சரியாக இருந்தது...மணமகனின் தோழன் அவனை அழைத்துச் செல்ல அவன் அந்த மண்டபத்திற்குள்ளே உள்நுழைந்தான்...அதற்குள் காலடி எடுத்து வைக்கும் போது அவன் மனதிலிருந்த குழப்பங்கள் அனைத்தும் அவனை விட்டு விலகிச் செல்வது போல் ஒரு உணர்வு அவனுள் எழுந்தது...அந்த சூழல் தந்த மன அமைதியோடே மணமேடையில் சென்றமர்ந்தான் அரவிந்...

அதன்பின் ஐயர் கூறிய மந்திரங்களை அவன் வாய் உச்சரித்துக் கொண்டிருந்தாலும்...மனம் அவளின் வருகைக்காய் காத்திருக்கத் தொடங்கியது...அவனை அதிக நேரம் காக்க வைக்காமல் ஐயர் மணமகளை அழைத்து வருமாறு கூறினார்...அந்த நிமிடம் அவனுள் பல்வேறு மாற்றங்கள் ஒருசேர உருவாகி அவனை என்னவோ பண்ணத் தொடங்கியது...அந்தத் தருணத்தை அவன் மிகவும் ரசித்தான்...அவள் கழுத்தில் தன் கரங்களால் மாங்கல்யம் சூட்டப் போகும் நொடிக்காக அவன் மனம் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்க,சிறுமிகள் படை சூழ அழகோவியமாய் அவள் அடியெடுத்து வைத்து அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்....

அரவிந்தனின் கண்கள் அவளை விட்டு விலகுவேனா என அடம்பிடித்துக் கொண்டிருந்தன...அவன் அருகில் அவள் அமர வைக்கப்பட்டதும் அரவிந்தனுக்கு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதென்பதே மிகவும் கடினமானதொன்றாகிப் போனது...உடனேயே தாலியைக் கட்டி விடலாம் என்றால்...இந்த ஐயர் வேறு மந்திரங்களாய் ஓதிக் கொண்டிருந்ததில் அவர் மேல் அவனுக்கு கொலைவெறியே வந்திருந்தது....

இங்கே துளசியின் மனமோ படபடவென அடித்துக் கொண்டேயிருந்தது...அவனை உரசியபடி அமர்ந்திருந்ததில் அவனை விட்டு விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் அவள் படாத பாடு பட்டுக்கொண்டிருந்தாள்...ஐயர் முகூர்த்தப் புடவையை மாற்றி வருமாறு கூறியதும் இப்போதைக்கு தப்பித்தேன் என எழ முயற்சித்தவளை..அவனது குரல் தடுத்து நிறுத்தியது...

"சீக்கிரமா வா....இதுக்குமேல என்னை கட்டுப்படுத்திக்க முடியும்னு தோனல...என்றவாறே அவளைப் பார்த்து கண்ணடித்தான்....

காதோரமாய் வந்த அவன் குரலில் தடுமாறிப் போனவள்,அவனைப் பார்க்காமலேயே எழுந்து சென்றாள்...

அவள் புடைவை மாற்றி வருவதற்கு எடுத்துக் கொண்ட இருபது நிமிடங்களும் இருபது யுகமாய் தோன்றியது அரவிந்தனுக்கு...மேள நாதஸ்வரங்கள் முழங்க அவனை நோக்கி வந்தவள்,அவன் கழுத்தில் மாலையை அணிவித்து அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்...அந்தப் புடைவையில் அவளை பார்க்க பார்க்க கொஞ்சம் கூட தெவிட்டவில்லை அரவிந்துக்கு...

ஐயரின் தயவில் அடுத்தடுத்து சம்பிரதாயங்கள் அனைத்தும் ஒழுங்காக நிறைவேறிக் கொண்டிருந்தன...அவளது பெற்றோர் அவளை அவனது கரங்களில் ஒப்படைத்த போது நடப்பதெல்லாம் கனவா இல்லை நனவா என்பதையே அவனால் நம்ப முடியவில்லை...இனி அவள் தனக்கு சொந்தமானவள் என்பதே மனதிற்கு மகிழ்ச்சியை தர...துளசியின் கரங்களை இறுக்கமாக பற்றிக் கொண்டான் அரவிந்...

காரில் மண்டபத்தை வந்தடைந்த அர்ஜீனை வாசலிலே வைத்து பிடித்துக் கொண்டார் அர்ஜீனின் தந்தை ஐங்கரன்..

"டேய் இதான் நீ அண்ணனோட கல்யாணத்துக்கு வாற நேரமாடா??எப்ப பாரு வேலை வேலை...இதுவரைக்கும் ஒரு தகவலும் தரல...வந்து நிக்கிறான் பாரு...என்னடா இது கோலம்?..."

"சொரி பா....எனக்கு மட்டும் ஆசையா என்ன...போன வேலைல கொஞ்சம் பிரச்சினையா போச்சு...அதான் கரெக்ட் டைம்க்கு வந்திட்டேன்ல...ஸ்டேசன்ல இருந்து நேர இங்கதான் வாறன்...அதான் டிரெஸ் சேன்ஜ் பண்ண முடில...."

"மேல இரண்டு ரூம்ஸ் இருக்கு...உன் அம்மா நீ எப்படியும் வருவேன்னு உனக்கான டிரெஸ்ஸஸ் எல்லாம் கொண்டு வந்திருக்கா...நான் போய் அதை கொண்டு வாறன்...நீ சீக்கிரம் போய் ப்ரெஸ் ஆகு...முகூர்த்த நேரம் நெருங்கிட்டு இருக்கு..."

"அம்மானா...அம்மாதான்...நான் மேல ரூமுக்கு போறன்....நீங்களும் சீக்கிரமா போய் எடுத்திட்டு வாங்க...அண்ணா தாலி கட்டுறதுக்குள்ள எப்படி வாறேன்னு மட்டும் பாருங்க..."

"இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சலில்லை..."

அப்பாவை ஒருவழியாக சமாளித்துவிட்டு ரூமுக்கு வந்து ப்ரெஸ்ஸாகியவன் அவர் கொண்டு வந்து தந்த வேஷ்டி சட்டையை போட்டதும் அசல் மாப்பிள்ளை மாதிரியே இருந்தான்...கண்ணாடியில் அவனை பார்த்துக் கொண்டவனுக்கு துளசியின் ஞாபகமே வந்து சென்றது...

"அண்ணன் கல்யாணம் முடியட்டும்...அடுத்து நம்ம கல்யாணம்தான்னு" மனதில் நினைத்துக் கொண்டவன்...மணமேடையை நோக்கிப் புறப்பட்டான்....



தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (20-Aug-17, 1:29 pm)
பார்வை : 669

மேலே