ஏனோ விழாத சில வரிகள்

வாழ்க்கை என்பது ஓடை தான்
அதில் ஓடக்கூட எனக்குத் தெரியாதா
அன்பின் பிணைப்போடும்
பாசத்தின் நுகர்வோடும்
ஈதலின் இன்பத்தோடும்
இளமையின் இனிமையோடும்
தாய்மையின் தனித்தன்மையோடும்
இவ்வோடையைக் கடக்க முயல்கிறேன்
மனிதன் மனிதனோடு
மனிதனாக மனிதத்தோடு
வாழக் காரணம்
இவ்வன்பின் பிணைப்பு தான்
அவ்வன்பின் மொத்த பெருவுருவாய்
நான் வாழ முற்படும் போதெல்லாம்
என் கண்ணின் கருவிழிக்குள்
ஆணியடித்தாற் போல் காட்சிகள்
சாதிக்கொலை, கொள்ளை
இவற்றின் இடையே என் கொள்கை
பரந்த அன்பென்னும் கொள்கை
உலகின் காதுகளில் ஏனோ விழாத
ஏதோ சில வரிகளைப்
பாடிக் கொண்டே உள்ளது..
"சமத்துவ அன்பு
அதுவே நம் பண்பு"

எழுதியவர் : சந்தியா (22-Aug-17, 8:37 pm)
பார்வை : 97

மேலே