்காதல் சின்னம்

கைகள் காய்களை
நறுக்கிக் கொண்டிருக்க...
மனமோ உன் நினைவில்
உலாவிக் கொண்டிருக்க....
ஆ....அய்யோ.....
கொப்பளித்த இரத்தத் துளியிலும்
தெரியுதே உன் முகம்!
வலியும் எரிச்சலும்
சட்டென்று காணாமல் போக.....
காயம் கூட
காதல் சின்னமானது!....

எழுதியவர் : ்கலாவிசு (25-Aug-17, 6:37 pm)
பார்வை : 108

மேலே