Kalavisu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Kalavisu |
இடம் | : புதுச்சேரி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 100 |
புள்ளி | : 13 |
தலைவர்...கவிதை வானில்கவிமன்றம..ஆசிரியர்..புதுவை கவிதை வானில் இ்தழ்..அஸிஸ்ட் உலக சாதனையாளர்..குடும்ப நல ஆலோசகர்.குடும்ப நல வழக்காடு மன்றம்
.
பேச்சாளர்...எழுத்தாளர்...
உன்னிடம் முத்தெடுக்க வந்தவர்களை பத்திரமாய் அனுப்பி
விட்டு ஊர் தேடிவந்து
மக்களை கொன்று குவித்தது ஏன்?
முத்துக்கள் குறைந்து விட்டன என்றா
மழலைகளை விழுங்கி வைத்தாய்?
பவழங்கள் மறைந்து போயின என்றா பாவைகளை
வளைத்து போட்டாய்....
வீரம் குறைந்து போனதால்
ஆடவர்களை அள்ளித் தின்றாயோ?
விவேகம் மங்கிப் போனதால்
முதியவர்களையும்
கொன்றுப்போட்டாய்?
உன் ஆசைகள் அடங்கிப்போயிற்றா?
அகோரப் பசி தீர்ந்துப் போயிற்றா?
இரத்த வாடை கண்டுவிட்ட
மிருகம் போல
மீண்டும் வருவாயோ மனித வேட்டையாட......
சம பலம் உள்ளவரிடம்
சண்டையிடுவதுதானே கம்பீரம்?
புற முதுகிட்டு ஓடுபவனிடம்
என்ன உன் வீரம்?
அதற்காகவாவது விட்டுவிடே
துரியோதனன் மனைவியிடம்
கர்ணன் சொக்கட்டான்
ஆடியது போல
உன்னுடன் விளையாட
எனக்கும் ஆசை்தான்.....
ஆனால் சாத்தியமில்லை தோழி!
ஆண் பெண் நட்பை
சரியான கோணத்தில்
சமூகம் அங்கீகரிக்கும்
நாள் வரை...
இயற்கையென்னும்
தலைப்பில்
வரையப்படுகின்ற
இயற்கை
ஓவியங்களில்
ஆறும்
ஆற்றையொட்டி
குடிசைகளும்
குடைவிரித்த
தென்னை மரங்களும்
தூரத்தில்
சூரியன்
உதிப்பதுமாய்
முன்பிருந்தன
இப்போது
லாரிகளும்
சேர்ந்துகொண்டன
என் உயிர் நண்பனே!
மரணத்தின் பாதையில் ஒருவேளை
நீ எனக்கு முன்பாக இருந்து விட்டால்
வடக்கு நோக்கி தவமிருந்து
என் உயிரை மாய்த்துக் கொள்வேன்..
நான் முந்திக்கொண்டால்
எனைத்தாங்கும் நால்வரில்
நீ ஒருவனாக மட்டுமே.....
மூடுகின்ற மண்ணில்
ஒரு கைப்பிடி மண்ணாக மட்டும்...
வாழ வேண்டும் நீ...காலமெல்லாம்...
என் கண்களின் ஒளியாக..
என் கவிதைகளின் செறிவாக....
ஒரு ரோஜா கூட வாங்கித்தருவதில்லை....
மகா கஞ்சன் நீ....
சண்டையிட்டேன் நான்...
என்னையே தந்திருக்கிறேனே...
இதை வி்டவா?
சிரித்தாய் நீ..
இப்படியேத்தான்
பேசி பேசி சமாளிப்பதிலும்
பொய்களை அள்ளி வீ்சுவதிலுமாக..
புரிந்தும் கோபம் மட்டும்
வருவேனா என்கிறது..
என் பலவீனமே
உன் பலமாகிறது..!
அழகுப் பிள்ளையார் பாருங்க...
அருகம்புல் மாலை போடுங்க..
கொழுகட்டை ரொம்பப் பிடிக்கும்
பொரி கடலையும் கூட வைக்கும்
யானை முகம் கொண்டவர்..
யாவருக்கும் பிடித்தவர்
தும்பிக்கை முகத்தில் உண்டு..
நம்பிக்கை தரும் நல்லவர்
அன்னை தந்தையை தெய்வம் என்றார்...
தம்பிக்கு திருமணம் செய்ய உதவினார்..
அவருடைய பிறந்த நாள் நாளைக்கு
.வாழ்த்து சொல்லுவோம் கணபதிக்கு...
தொலைபேசி
சிணுங்கும் போதெல்லாம்
்நீயோ என ஆவலாய்...
அழைப்பு மணி
அழைக்கும் போதெல்லாம்
நீதான் எனவேகமாய்...
ஒரு முறை
ஒரே ஒரு முறை வந்துவிடேன்...
உன் மீது
நான் வைத்திருக்கும்
நம்பிக்கையை
நிறைவேற்றவாவது....
நாம்
இருவரும்
சந்தித்துக்கொண்ட
தருணங்களில்
மகிழ்ச்சி மட்டுமே
கிடைத்து விடுவதில்லைதான்
ஆயினும்
அந்த நிமிடத்து துளிகளைச்
சேமித்து வைத்திருக்கிறேன்...
நீ வராத நாட்களின்
சோகத்தினைப்
போக்கி விட......