வேண்டும்
வானோடு உயர பறக்கவேண்டும்
காகிதாய்.
மழையோடு ஒன்று சேரவேண்டும்
ஈரமாய்.
வறுமையோடு புனையவேண்டும்
மொழி கவிஞனாய்.
மலரோடு மெல்ல அலரவேண்டும்
மகரந்தத்தூளாய்.
நெற்கதிரோடு நீளுதல்வேண்டும்
இலைப்புல்லாய்.
திரளும் முகிலோடு கற்கவேண்டும்
யாவருக்குமான ஆலியாய்.
ஆய் அன்போடு அவளும்வேண்டும்
என் பிள்ளையை சுமக்க.