வெயில் - குளிர்

கதிரவனின் தகிக்கும் வெப்பக்கதிர்களில் அகப்பட்ட உயிரினங்கள் மழை வேண்டி தவம் கிடக்க, பனியில் அகப்பட்ட உயிரினங்கள் வரம் கேட்கின்றன கதிரவனிடம் தகிக்கும் வெப்பக்கதிர்களால் குளிர்போக்கவே...

குளிர் தென்றலது வீசிடுமா?
வெப்பக் காற்று தான் வீசிடுமா?
இரண்டில் எது யாருக்கு இதம் தரும்?
என்று அறியாத மக்களின் கலாச்சாரத்தைப் பாருங்களே...

காற்றுப்புகாத காலணிகளும், இறுக்கமான ஆடைகளும் குளிர்தேச மக்கள் அணிய,
அதுவே நாகரீக கலாச்சாரமென தகிக்கும் வெயிலில் வெப்பக்காற்றில் உடலை அவிக்கும் காற்றுப்புகாத காலணிகளும், இறுக்கமிகு ஆடைகளும் அணிந்து வலம் வரும் மடமை நிறைந்த மக்களின் நிலை அந்தோ பரிதாபம்! பாரீர்...

கல்லினுள் சிற்பம் இருக்கிறதென்பதால் வெறும் கல் சிற்பமாகுமா?
அதை உளி கொண்டு செதுக்க வேண்டாமோ?

என் வார்த்தைகளின் அர்த்தம் புரிகிறதா?

உடலை மறைக்கவே ஆடை...
உடலை அவிக்க அல்ல...

கம்பளி ஆடை குளிர்க்குகந்தது போல,
காற்றோட்டமான பருத்தியாடையே வெயிலுக்குகந்தது என்ற அறிவியலை அறியாத அறிஞர்களின் நடிப்பு...
மேலை நாட்டு அறிஞர்கள் போல் ஆடை அணிந்து கொண்டால் அவர்களைப் போல் அறிவாளிகளாகி விடுவோமா?

அறிவு ஆடையில் இல்லை...
சிந்தனையில் உள்ளது அறிவு...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Aug-17, 8:20 pm)
பார்வை : 949

மேலே