நான்

நான் என்பது வெறும் வெறுமை
அதில் ஒன்றும் இல்லை
உலகில் ஒன்றில்லாமல்
மற்றொன்றில்லை
எல்லாம் ஒன்றோடு ஒன்று
இணைக்கபட்டிருக்கிறது...

நான் என்று மார்தட்டிக்கொள்ளும்
மானிடனே நீ மட்டும்
செய்து காட்டிய சாதனைதான்
என்ன சொல்லு
சாதனையாளன் ஆகவேண்டுமானால்
அதற்கு குரு என்ற பாத்திரம்
வேண்டும்...

உறவுகளிலே நான் அப்பா
என்று சொல்லிக்கொள்கிறாய்
அப்பா என்ற பாத்திரத்தில்
நீ வாழ அல்லது
நடிக்க வேண்டுமானால்
மனைவி மற்றும் பிள்ளை
என்ற பாத்திரங்கள் வேண்டும்

நான் தலைவன் என்று சொல்லிக்கொள்கிறாய்
நீ தலைவன் என்ற பாத்திரம்
ஏற்க வேண்டுமானால்
தொண்டன் என்ற பாத்திரம் வேண்டும்...

நான் முதலாளி
என்று பெருமை பட்டுக்கொள்கிறாய்
தொழிலாளி இல்லாமல்
முதலாளிகள் இல்லை

நான் என்றால் நீ வேண்டும்
நீ இல்லாமல் நானில்லை
நீ என்றால் நான் வேண்டும்
நானில்லாமல் நீ இல்லை...

நான் செய்தேன் நான் வளர்த்தேன்
நான் பெற்றேன் நான் காத்தேன்
நான் கொடுத்தேன் என்பதெல்லாம்
மாயை
நான் என்பது இல்லை என்ற
வார்த்தையின் மறு உச்சரிப்பே
தவிர வேறொன்றுமில்லை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (26-Aug-17, 8:50 pm)
Tanglish : naan
பார்வை : 384

மேலே