மனதை தொலைப்பது நல்லது
ஓயாமல் சுற்றும் மனதை
கட்டிப்போட
கயிறுகள் இல்லை !
ஓரிடம் விட்டு வேறிடம்
தாவுவதுதான்
பெரிய தொல்லை !
மனதின் இயல்பு நகர்வது
அது
சுற்றித் திரிவதில் மகிழ்வது
மகிழ்ச்சியும் துன்பமும்
வேண்டாமென்றால்
மனதை தொலைப்பது நல்லது !
@இளவெண்மணியன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
