அ ஆ
அம்மா இங்கே வா வா
இதுபோல விளையாட்டாக ஒரு பாடல்
சூழ்நிலை : மிட்டாய் கேட்கும் குழந்தை
சிறுவன்: அம்மா தின்னத் தா தா
அம்மா : ஆஹா என்ன வேணும்
சிறுவன்: இனிப்பு மிட்டாய் தானே
அம்மா : ஈன்னு வந்து நிற்பே
சிறுவன்: எனக்கு உண்ண ஆவா
அம்மா: ஏவல் செய்தல் வேணாம்
சிறுவன்: ஐந்து தரக் கேட்பேன்
அம்மா: ஒன்று மட்டும் தருவேன்
சிறுவன்:ஓடி அப்பா கூப்பிடுவேன் /ஓயாம அடம் பிடிப்பேன்
அம்மா: ஒளடதம் தின்ன நேரும்
அஃது நமக்கு வேண்டாம்