போர்க்களம் - 5
பாகம் 5
சமுத்திராவின் வீரம் மன்னன் ருத்ரவனுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே ருத்ரவன் சமுத்திராவை காண போர் கலத்துக்கே சென்றான்.
ருத்ரவன் சமுத்திராவை பாராட்டினான்,
சமுத்திரா உன் வீரத்தை பற்றி தளபதி மகிசா கூறினான். உன்னை நினைத்து நான் பெருமை அடைகிறேன். நம் நாட்டுக்கு உன் போல் ஒரு வீரன் மிக முக்கியம். உன் தந்தையை போல் நீயும் ஒரு சிறந்த வீரன் என்பதை நிருபித்து விட்டாய். அதேபோல் உன் தந்தையின் ஆசையையும் நிறைவேற்றி விட்டாய் என்றால் நம் நாட்டுக்கு எதிர்காலத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று கூறினான்.
என் தந்தையின் ஆசையா ? அது என்ன என்று சமுத்திரா ஆவலுடன் கேட்கிறான்.
ஆர்யவர்தா தீவின் முக்கிய மந்திரி சந்த்ரவன். சந்த்ரவன் மிகவும் திறமைசாலி என்பதால் நாம் வகுக்கும் அனைத்து போர் தந்திரங்களும் அவனால் முறியடிக்கப்படுகிறது. அதனால் ஆர்யவர்தா தீவில் ஊடுருவி அவனை கொல்ல வேண்டும் என்பதே உன் தந்தையின் ஆசை என்று ருத்ரவன் கூறினான்.
என் தந்தையின் குறிக்கோள் அதுவென்றால் நான் என் முழு மனதோடு அதை செய்து முடிக்கிறேன் என்று சமுத்திரா மன்னருக்கு உறுதி அளிக்கிறான். உடனே மனம் மகிழ்ந்த மன்னன் எல்லை பகுதி வரைபடத்தை சமுத்திராவிடம் ஒப்படைக்கிறேன்.
பிறகு தளபதி மகிஷாவும் சமுத்திராவும் கலந்துரையாடி, ஆர்யவர்தா தீவுக்குள் நுழைய ஒரு சரியான வழியை இறுதியாக கண்டறிந்தனர். அது நீர்வழியாக அவர்கள் தீவுக்குள் நுழையும் வழி. மன்னரும் அது சரியாக இருக்கும் என ஒப்புக்கொள்ள, உடனே அவ்வழியாக செல்ல ஏட்பாடுகள் தொடங்கப்பட்டது.
அடுத்த நாள் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு, ஒரு படகில் சமுத்திராவும் அவனுடன் சிறப்பாக போர் புரிந்த நான்கு கைதி வீரர்களும் புறப்பட்டனர். திட்டமிட்டது போல் ஐவரும் அந்த இடத்தை வந்தடைந்தனர். ஆனால் அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பெரிய மலை ஒன்று அவர்கள் முன் நின்றது, அம்மலையின் விவரம் வரைபடத்தில் இல்லை. எது எப்படியோ நாம் எப்படியாவது இந்த மலையை கடந்து ஆயுர்வர்தா தீவுக்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணத்துடன் மலையில் ஏற தொடங்கினான் சமுத்திரா. மற்றவர்களும் அவனை பின்பற்றி ஏறினர்.
மழை ஓயாமல் பெய்து கொண்டிருப்பதால் ஏறுவது மிகவும் கடினமாக இருந்தது. துரதிஷ்ட வசமாக பாதி வழியிலேயே அவர்களுடன் வந்த ஒருவன் கால் தவறி கீழே விழுந்து இறந்து விட்டான். ஐவர் நால்வராகினர். அதை பற்றி கவலைப்படாமல் விடா முயட்சி செய்து நால்வரும் மலையில் ஏறி கீழேயும் இறங்கினர். அதன் பிறகு நால்வரும் நான்கு திசையில் பிரிந்து சென்று பின் ஒரு வாரத்துக்கு பிறகு அதே இடத்தில் சந்திக்க வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துவிட்டு பிரிந்து சென்றனர்.
சமுத்திரா ஆர்யவர்தா தீவின் மலையடிவார கிராமத்தை வந்தடைந்தான். அங்கே ஒரு வயதான முதியவர் மேலும் கண்பார்வை அற்றவர் அவரின் வீட்டு முன்பு அமர்ந்து பறவைகளுக்கு உணவளித்து கொண்டிருந்தார். சமுத்திரா அவர் அருகே சென்று உதவி கிடைக்குமா பெரியவரே என்று கேட்கிறான். யார் நீ? உனக்கு என்ன உதவி வேண்டும் என அவர் கேட்க, நான் ஒரு மருத்துவர் விந்திய மலையடிவாரத்தில் வாழ்கிறேன் என்றும் நான் என் குழுவோடு மூலிகை பறிக்க படகில் சென்ற போது விபத்து ஏற்பட்டு மற்ற அனைவரும் இருந்து விட்டதாக கூறி பெரியவரின் கருணையை பெற்றான். அவனின் பரிதாப நிலையை உண்மையென நம்பி அவனுக்கு அவர் வீட்டில் தங்க அனுமதி அளித்தார்.
இதே போல் மற்ற நால்வரும் வெவ்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்து அடுத்த திட்டதிட்காக பொறுமையாக காத்திருந்தனர்.