எதிர்பாராத முதல் முத்தம்

எதிர்பாராத முதல் முத்தம்!

இதயத்தை சிலிர்த்த உயிருருகும் சப்தம்
ஈரிதழ் தழுவிய சுகமான யுத்தம்
இன்னும் இன்னும் வேண்டுது நித்தம்
எதிர்பாராது அவன் தந்த முதல் முத்தம்

கூச்சம் மூட்டிடும் குறுகுறு மிசை
ஆண்மகன் என்ற மமதையில் மோதிட
உணர்நரம்புகள் கிரங்கி இமையிதழ் மூடி
மதுவுண்ட போதையாய் சிதைந்ததவள் சித்தம்

இதமாய் இறுக்கிய இருதடக் கரங்களின்
இச்சைக்கு இயைந்து தடைகளை தகர்த்தாள்
இதயம் படபடத்து இயல்புகள் கடந்து
இருமணன் இரப்பில் சரண் புகுந்தாள்

ஈருயிர் இணைப்பின் ஆரம்ப அச்சாரம்
இல்லற இன்பத்தின் முழுமுதல் அர்ப்பணம்
உறவுடன் கலந்த உணர்வின் உக்கிரம்
உரிமைக் காதலுக்கு இதுவே உற்சவம்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (30-Aug-17, 3:36 pm)
பார்வை : 277

மேலே