ஆண் பெண் ஈர்ப்பு
பள்ளி கல்லூரிகளில்...
ஆண் பெண் ஈர்ப்பு,
எந்தன் பார்வையில்...
புரிந்து கொள்வதில்,
நட்பின் ஈர்ப்பு...!
பகிர்ந்து கொள்வதில்,
அன்பின் ஈர்ப்பு...!
எண்ணங்களின் உரையாடலில்,
உணர்வுகளின் ஈர்ப்பு...!
கரங்களை இணைத்துக்கொள்வதில்,
பாதுகாப்பின் ஈர்ப்பு...!
தட்டிக் கொடுப்பதில்,
ஆறுதலின் ஈர்ப்பு...!
உள்ளத்தை இணைத்துக்கொள்வதில்,
காதலின் ஈர்ப்பு...!
உறவுகள் தொடரும் போது,
மகிழ்ச்சியின் ஈர்ப்பு...
பிரிவின் நினைவுகளில்,
கண்ணீரின் ஈர்ப்பு...!
-ஜெர்ரி