காதல் பாட்டு
..................................
காதல் பாடல்
லா....ல லால லாலா- லல்லாலா - மெட்டு
நீ மேற்...கில் உதிக்கும் நேரம்- என் நேரம்... பரி
மா...ற்றம் நிகழ்த்தும் உள்ளம் - எந்நேரம்.
கனவுகள் தாலாட்ட - விழி
இடையிடை நீர் வார்க்க - சில
கனவுகள் தாலாட்ட - விழி
இடையிடை நீர் வார்க்க
ஒருமுறை இருமுறை
வரைமுறை கடந்திடும்.. (மேற்கில்)
1
பொன்மகன் வருகையில் கண்மணி சுடர் விடும்
மின்மினி ஆகிடுமே..
பூமணி மேடையில் பொருந்திடப் பெண்மணி
பூமனம் நாடிடுமே.. (பொன்மகன்)
பின்னலும் வேர்க்குது கன்னமும் பூக்குது
என்ன என் கோலங்களோ...
குங்குமச் சிமிழுக்கு குளிர் ஜூரம் தந்தது
கோமகன் ஜாலங்களோ..
தவிப்புக்கு தவிப்பில்லையோ.... -உதட்டுத்
தறியினில் வார்த்தைகள் நொடியினில் அறுபடும்.. (மேற்கில்)
2
காதலின் கவிதைகள் காதினில் சேர்ந்திடும்
காலமும் வரவில்லையோ..
காதினில் சேர்ந்தது மாதிவள் மனதென்று
மன்னவன் பெறவில்லையோ..
ஆசையில் நாணிடும் அணங்கிவள் சாயல்கள்
ஆயிரம் பூவிலுண்டோ..?
அனைத்தையும் அறிந்திரு மலர்க்கரம் தவிர்ப்பது
ஆண்மைக்குத் தீமையன்றோ..
அழைத்திட மனமில்லையோ .. இரவு
இழைத்திடும் தனிமையில் இளமைக்குப் பயம் வரும்.. (மேற்கில்)