ஜாலியும் கூலியும்
பாரேழ் மையொழி அரசுத் திட்டம்
ஏரியா ழமாக்க ஒர்திட் டம்மாம்
வாரும் தூருக் குதினமும் கூலி
ஏரி தூர் எடுக்க கும்பல் திரண்டது
தூரிரண் டுதட்டெடுத் துப்பின் அவரும்
ஊர்கதை பேசிதம் சோற்றைப் பிரிப்பர்
யாரும் யாரையும் கேட்காத் தூக்கம்
ஏரியில் இப்படி நூறுநாள் ஜாலி
சூரியன் மறைந்ததும் கூலி
ஏரியில் தண்ணீர் நில்லாப் போனதே
---ராஜப் பழம் நீ (17-Aug-2017)