மகளே வா

அழகான ராகங்களில்
ஆனந்த கீதம் தந்து
இசையாக நீ வா
ஓடாத எந்தன் உள்ளம்
உந்தன் பாட்டினில் வாழட்டுமே...


கன்னத்தில் முத்தமிட
எந்தன் கண்ணம்மா நீ வா...
வாழ்க்கையின் பொன் நகையாய்
எந்தன் புன்னகையே நீ வா...

எழுதா ஏட்டினிலே
அந்த நீல வானத்திலே
சோலை பூக்களிலே
பேசா மொழிகளிலே
எந்தன் மெல்லப் புன்னகையே ...
கண்ணம்மா உன்னை தேடுகிறேன்...
அம்மா என்றே அழைத்திடவே
எந்தன் கண்ணம்மா
எனக்கே எனக்காய் வேண்டுமே...

ஆரத்தழுவி
மார்பில் கோர்த்துக் கொள்ள துடிக்கின்றேன்...
வயிற்றை தடவி பார்த்துக் கொள்கிறேன்...
மனம் முழுக்க நீயே கண்ணம்மா....

உனக்காகமா
~அம்மா பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (6-Sep-17, 3:47 pm)
Tanglish : magale vaa
பார்வை : 130

மேலே