கவுரி லங்கேஷ்

ஊடகத்திற்கு
பெரும் விடுதலை
இந்தியாவில்
உண்டு தான்...
என்றாலும் ஆளும் கெட்டவர்கள்
தீவினை வாதிகளாய் மாறுகின்றனர்...
பன்சாரே களும்,
கல்புர்கி களும்,
தபோல்கர் களும்
கவுரி லங்கேஷ் களும் ...
எழுத்தால் எடுத்து சொன்னவர்கள் தான்
இருந்தும், கொலை செய்யப்பட்டுள்ளனர்.
எழுத்தில் பிழை இருந்தால்
கொலை தீர்வாகாது...
ஏதோ பிழை இருந்ததால்
கொலை நிகழ்ந்துள்ளது...
எல்லாமே மக்கள் மனதில்
பதிந்துகொண்டுதான் உள்ளது...
வரலாற்றில் மாறி நற்செய்தி
கூறி உண்மை நிலைகொள்ளும்...
- சு.சுடலைமணி