கற்பக மரம்

கற்பக மரம் !
கவிதை by : கவிஞர் பூ.சுப்ரமணியன்

வேண்டுவோருக்கு
வேண்டியதை
விருப்பமுடன் அளிக்கும்
கற்பக மரமே !

மனம் என்னும்
கற்பக மரத்தடியில் நின்று
அன்பு ஆன்மிகம்
வளரக் கேட்போம் !

இனியவை ஈன்றவள்
மகிழக் கேட்போம் !

உண்மை ஊக்கம்
ஆக்கம் கேட்போம் !

எவ்வுயிர் தம்முயிர்போல்
நினைக்கும் ஏற்றமிகு
உள்ளம் கேட்போம் !

எல்லோரும் இன்புற்றிருக்க
மனிதநேயம் கேட்போம் !

பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (6-Sep-17, 4:25 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : karpaka maram
பார்வை : 71

மேலே