கள்ளியே
கற்று கொள்கிறேன்
கள்ளியே!!
நீ
நிராகரிக்கப்பட்ட
நிலங்களின்
சரித்திரம்,,,,,
எதையும்
தாங்கலாம்
என்பது
உன் வேதம்!!
உயிர்கள்
மரித்துப் போகும்
வெப்பத்திலும்
நீ
வேர் பிடிக்கிறாய்!!!!
நந்தவனங்கள்
அனுமதிக்காவிட்டாலும்
தகிக்கிற தேசம்
உனது தாயகம்,,,,,
உன்னிலிருந்து
உள்வாங்கி கொள்கிறேன்
நம்பிக்கையை!!!!!!!!!