அனிதாவின் மூச்சுக்காற்று
அனிதாவின் மூச்சுக்காற்று
"என்னவாக போகிறாய்"
அன்று ஆசிரியர்
கேட்ட கேள்விக்கு
குடும்ப சூழ்நிலை கூட
அறியா பருவமதில்
கூறிய பதிலாக
இருக்கலாம்
'மருத்துவராக போகிறேன்'
என்று..
ஏழ்மை என்னும்
இருளில் பிறந்த
இளவரசி அவள்!
பயிலும் கல்வி
ஒளிவீசி
இருள் நீக்கும்
என்ற நம்பிக்கையில்
எதிர்ப்பார்ப்புடன்
நாட்களை கடத்திருக்கலாம்
அவளின் பெற்றோர்கள்..!
தங்களை விட
நல்ல மதிப்பெண் பெற்ற
அவள்! கனவை
நனவாக்கிவிட்டால்
மருத்துவரின் தோழி
என்னும்
பெருமைக்குரியவர்களாகலாம்
என்று நினைத்திருக்கலாம்
அவளின் தோழிகள்..!
நாளை
மருத்துவராகி விட்டால்
தன்னுடைய சமுதாயத்திற்கு
இலவசமாய்
மருத்துவம் பார்ப்பாள்
என்னும் நினைப்பில்
மிதந்திருக்கலாம்
அவளின் சமூகத்தினர்..!
நீட் தேர்வு
அவளின் கனவு
விடிவை காணும் முன்
முடிவை காட்டிவிட்டது!
ஏங்கிய மூச்சுக்காற்று
நின்றது அவளுடையது
மட்டுமல்ல...
மருத்துவராகி விடலாம்
என்ற கனவோடிருந்த
ஒவ்வொரு
மாணாக்களுடையதும்!
அனிதாவின் ஆன்மா
சாந்தியடையட்டும்..!
By
நா.சதீஷ் குமார்