இந்திய இறையாண்மையை மதியுங்கள்

நான் தேசிய கீதம் பாடிக்கொண்டிருக்கும் பொழுது என்னை பாம்பு தீண்டினாலும் அசையாமல் நிற்பேன்.
தேசிய கீதம் பாடி முடிக்கும் வரை அசையமாட்டேன்.
என் பற்று...உள்ளுணர்வு ஆழமானது...
என்னை சிறு நொடியும் அசைய விடாது என் மனம்...

திருப்பூர் குமரன் அவர்கள்
தேசியக் கொடி மண்ணில் சரியக்கூடாது என்று
தானே சரிந்து போனார்.

அப்படி தேச இறையாண்மையை எந்நொடியும் மதித்து
அதை சிறிதும் குலைக்காதவர்கள் தான் தமிழர்கள்.
அப்படி பட்டவர்களை அரசு
ஆண்டி இண்டியன் என்கிறது.

ஒப்பிடுவது தவறு.
ஆனால் தூங்குகிறவர்களுக்கு புரிய வேண்டுமே...

கலவரம்..அடி.தடி..தீ வைப்பு
நடக்கும் வடநாட்டில்..
வன்முறையால் ஊரே துன்பப்படும்.
ஆனால் இங்கே எந்த ஒரு சிறு கலவரமும் இன்றி அமைதி வழியில்
போராடுவது தவறு.
போராடுகிறவர்கள் எல்லாம் தேச துரோகிகள்...
நியாயமான கோரிக்கைகளுக்கு போராடுகிறவர்கள் தேசத்துரோகிகள் என்றால்
தமிழர்கள் தேசத்துரோகிகள் தான்...
*******************************************
நான் மேலே சொல்லியிருந்தேன் அல்லவா...
பாம்பு எனை தீண்டினால்.
அதுவே பிறராக இருந்தால் என் மனிதமே வெற்றி பெரும்...
ஒவ்வொரு உயிரும் என் தாய் தான்.

பசியில் ஒரு குழந்தை
அழும் பொழுது
நான் ஓய்ந்திருக்கலாகாது
என் மார்பில் பால் வழியும் தருணம்..

நினைவில் கொள்ளுங்கள் நான் கைபேசியில் பேசிக்கொண்டு தேசிய கீதத்தை அவமதிக்கவில்லை.
திரையரங்கிலும் சரியாக மரியாதை செலுத்துவேன்.

மாட்டை துன்புறுத்தக்கூடாது என்று சொல்லிட்டு மனிதனை துன்புறுத்தலிங்க.
ஏங்க எனக்கொரு சந்தேகம்..
அப்ப அடிமாட என்ன பண்ணுவிங்க...
வெளிநாட்டுக்கு கறிக்கு ஏற்றுமதி பண்ணிட மாட்டோம்...

என் தேசத்திற்கு நான் என்றைக்கும்
மரியாதை செலுத்துவேன்...
என் தேசத்தாய் என் மொழியிலேயே வீற்றிருக்கிறாள்...

எந்த நாட்டில் நாங்கள் இருந்தாலும் நாங்கள் தமிழர்கள்...
எங்கள் தாய் மொழி தமிழ்...
எங்கள் தாய்த்தமிழ்...
நாங்கள் எல்லோருடைய உணர்வுகளையும் மதிப்போம்...
எல்லா உயிரும் உயிரே...

தமிழ் தான் எங்கள் அடையாளம்...
தமிழ் தான் எங்கள் உயிர்...
தமிழ் தான் என் தேசம்...
தமிழ் நாடு தான் எங்கள் தாய்நாடு...எங்கள் நாடு...
தமிழ் தான் எங்கள் சுவாசம்...
தமிழர்களுக்கு தமிழ் தானே யாவும்...
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து
விழுப்புரம் திண்டிவனம் மாநிலம்
தமிழ்நாடு

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (8-Sep-17, 5:07 pm)
பார்வை : 95

மேலே