ஸ்பரிசம்

அதிகாலை ஆரம்பம் என் கேசம் வருடலில் உன் பூ விரல். இமைக்காமல் ரசித்தேன் இமைக்கும் உன் கயல்விழியை. உன் மூக்கு நுனி விடுதலை செய்த சுவாச காற்று என் நாசிக்குள் சிறைபுகுந்தது. இதழ் மலர்ந்த உன் விரசப் புன்னகை என்னுள் இடையின்றி மின்னல்கள். உன் கூந்தல் குடைபிடித்தும் காதல் ஸ்பரிசம் என்னை நனைத்தே விட்டது.இன்னமும் அயர்ந்தேன் மீண்டும் இன்று விடியாத என்று...

எழுதியவர் : செந்தில்குமார் (9-Sep-17, 8:23 pm)
Tanglish : sparisam
பார்வை : 132

மேலே