நான் என்ன செய்ய

செய்வதெல்லாம் நீயே....பின்
நான் என்ன செய்ய...
பாவம் என் மனம்.....
உன்னைக் கனவில் காண ஏங்கி,
இரவைத் தேடுகிறது....
இரவு வரும்வரை,
உன் நினைவுகளில் ஓடுகிறது....
இரவில்,
உன் நினைவுகள் கலையுமென அஞ்சி,
உறக்கம் தடுக்கிறது....
பின்,
உன் கனவுத்தரிசன ஆர்வம் தூண்ட,
உறக்கம் நாடுகிறது....
உறக்கத்தில்,
நீ வரும் கனவுகளுக்கு ஏங்கி,
விடியலே வேண்டாமென்கிறது.....
ஆனால்....மீண்டும்,
உன் நினைவுகளில் நீந்த ஆவல்கொண்டு,
சூரியனோடு சேர்ந்து எழுகிறது....
இவைகளை,
செய்வதெல்லாம் நீயே...பின்
நான் என்ன செய்ய....
பாவம் என் மனம் 💚