என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 29

கெங்கராம்பாளையம்.....செந்திலின் வீடு, விழுப்புரத்தில் தனியாக ரூம் எடுத்து தங்கி இருந்த செந்தில் பணி நிரந்தரமானதால் தனி வீடு எடுத்து இருந்தான்.

அன்று இரவு அனைத்து மாணவர் மாணவிகள் அங்கு வந்திருந்தாலும் அவன் கண்கள் என்னவோ காயத்ரியையும் விஜியையுமே பார்த்துக்கொண்டிருந்தது.

வீடு தனியாக எடுத்திருப்பது அவர்களின் குடும்பத்தை கொண்ட வர என்று தெரிவித்தான் செந்தில்.

"சனியன் தனியா இருந்துச்சு, இப்போ குடும்பத்தோட இருக்க போகுது" என்றாள் விஜி.

காயத்ரிக்கோ இந்த கூட்டம் எப்போது முடியும் என்று இருந்தது.

அவ்வளவு பேர் இருக்கும்போதும் காயத்ரி போனுக்கு "இன்னிக்கு இந்த க்ரே டைட் சல்வார் கமீஸ் ல செம்ம செக்சியா இருக்க" என்று மெசேஜ் செய்தான் செந்தில்.

காயத்ரிக்கு சங்கடமாக இருந்தது. "ஏய் என்ன டி, ஏன் நெளியற, என்ன ஆச்சு" என்றாள் விஜி.

"விஜி, இந்த டைப் சல்வார் கமீஸ் கு துப்பட்டா இல்ல டி, இந்த நாய் அசிங்கமா மெசேஜ் பண்ரான்" என்றாள் காயத்ரி.

"நீ சரியான லூசு டி, நான் கூட யோசிக்கல பாரு" என்று நொந்துகொண்டாள் விஜி.

அனைவரும் பப்பே முறையில் தயாரான உணவுகளை உண்ண தொடங்கினர். காயத்ரிக்கோ மனமே இல்லை, எப்போது கிளம்புவோம் என்று இருந்தாள்.

"காயத்ரி, சரி, வா, நீ ரொம்ப அனீஸியா இருக்க,நாம கிளம்பலாம்" என்றாள் விஜி.

"ஆமாம் டி, கை, இந்த பொறுக்கி இங்கயே பாக்கறான், அவன் கண்ணுல கொள்ளிக்கட்டையை வெக்க" என்றாள் காயத்ரி.

"காயத்ரி, நீ உன்னோட ரீயாக்ஷன காட்டாம இரு, வா நாம கிளம்பலாம்" என்றபடி "சார், நாங்க கெளம்பறோம் சார், நாங்க வண்டி ல வந்தோம், நைட் ல தனியா போக முடியாது, அது மட்டும் இல்ல பூச்சிகள் கண்ணுல அடிக்கும்" என்றாள் விஜி.

"நோ ஓரிஸ், நீங்க வேணும்னா நைட் இங்க இருந்துட்டு காலை ல போங்க" என்றான் செந்தில்.

"சார், கொஞ்சம் நாகரீகமா பேசுங்க, நாங்களும் ரொம்ப பொறுமையா போறோம், நீங்க ரொம்ப உங்க லிமிட்ட க்ராஸ் பண்றீங்க" என்று கோபத்தில் காயத்ரி கூற விஜி அதிர்ந்து போனாள்.

காயத்ரியின் கையை பிடித்து அழுத்தினாள்.

"நீ சும்மா இரு விஜி, இதுக்கு மேல பொறுத்துக்க முடியாது, சார், நீங்க அனுப்பின மெசேஜ் நான் எல்லாருக்கும் காட்டவா, உங்க நேச்சர் என்னன்னு எல்லாருக்கும் தெரியட்டும்" என்று கோபமாக பேசினாள் காயத்ரி.

"காயத்ரி, மைண்ட் யுவர் டங்" என்றான் செந்தில்.

இந்த உரையாடல் வீட்டின் ஒரு பக்கத்தில் நடந்ததால் சாப்பாடு சாப்பிடும் சகா மாணவர்கள் இதை கவனிக்கவில்லை. ஏதோ சாதாரணமாக பேசுவதாக நினைத்தனர்.

"என்ன சார், மைண்ட் பண்றது, நீங்க ஒரு பாடம் சொல்லி குடுக்கற லெக்ச்சரர் மாதிரி நடந்துக்கோங்க, நான் துப்பட்டா போடலன்னு தான சார் அப்டி ஒரு மெசேஜ் அனுப்புனீங்க, இவ்ளோ கிட்ட நிக்கறேன், நல்லா பாத்துக்கோங்க சார்," என்றபடி தன்னை நோக்கி விரலை காட்டிக்கொண்டாள் காயத்ரி.அவள் கண்கள் கலங்கின.

"ஹெலோ, பிஹேவ் ப்ராபர்லி" என்றான் செந்தில்.

"என்ன சார், யாரு இம்பரப்பரா பிஹேவ் பண்ணினா, டெயிலி டெயிலி நீங்க அசிங்கமா மெசேஜ் பண்ணிட்டு இருக்கீங்க. எவ்ளோ மனக்கஷ்டத்துல நான் இருக்கேன் தெரியுமா சார், பொண்ணுங்க படிக்க வர்றதே பெரிய விஷயம் சார், காலைல பஸ் ல அவ்ளோ நெரிசல் ல வரோம், இங்க வந்தா பசங்க தான் எங்களோட இந்த பார்ட் அப்டி இருக்கு, அந்த பார்ட் அப்டி இருக்கு ன்னு எங்க காது பட பேசறாங்க, நெத்தில போட்டு வெக்காம வந்தா உடனே எங்களுக்கு அந்த மூணு நாள் னு சொல்றானுங்க, கண்ணு செவந்திருந்தா நைட் புல்லா செம வேல ன்னு சொல்றானுங்க....நீங்க ஒரு லெக்ச்சரர், எங்களுக்கு சப்போட் பண்ணலானாலும் பரவால்ல சார், நீங்களும் எங்க உடம்ப பாத்து ஒரு செக்ஸுவல் ஷோகேசா நெனைக்காதிங்க, உங்கள கெஞ்சி கேட்டுக்கறேன், வா விஜி" அழுதுகொண்டே கிளம்பினாள் காயத்ரி.

விஜியும் பின்னாலேயே கிளம்பினாள்.

"காயத்ரி...வண்டியை நான் ஓட்டறேன், நீ பின்னாடி உக்காரு" என்றாள் விஜி.

"இல்ல விஜி, நான் ஓட்டறேன், ஐ ஆம் நார்மல்" என்றாள் காயத்ரி.

"இல்ல காயத்ரி, நான் சொல்றத கேளு, நீ ஓட்டினா நான் உன்கூட வாரா" என்றாள் விஜி.

"என்ன டி, சரி, இந்தா நீயே ஓட்டு" என்றபடி சாவியை கொடுத்தாள் காயத்ரி.

வண்டியை எடுத்தாள் விஜி.

சற்று தூரம் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. விஜி ஆரம்பித்தாள்.

"என்ன காயத்ரி நீ, இப்டி எல்லாம் பேசிட்டே, அவன் நல்லவனா இருந்தா திருந்தணும், நீ பேசின பேச்சுக்கு அவன் சூசைட் தான் பண்ணிக்கணும்" என்றாள் விஜி.

"என்னன்னு தெரில டி, அந்த மெசேஜ் பாத்ததும் பர்ஸ்ட் அவுட் ஆயிட்டேன், இப்போ யோசிக்கறேன், என்ன பண்ணபோறானோ" என்றாள் காயத்ரி.

"பேசினதை பேசிட்டு இப்போ பீல் பண்றியா, நான் கைய கிள்ளறேன், நீ அதையும் மீறி பேசற" என்றாள் விஜி.

"விடு டி, பாத்துக்கலாம், என் தலை எழுத்து, " என்றாள் காயத்ரி,

"இப்போ நாளைக்கு அவன் நம்மள எப்படி ட்ரீட் பண்ணபோறானோ னு நெனச்சாலே பயமா இருக்கு டி" என்றாள் விஜி.

"எனக்கு தான டி பிரச்சனை, விடு, முடிஞ்சா அளவு சமாளிக்கறேன், இல்லனா செத்துப்போறேன்" என்றாள் காயத்ரி.

வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு இறங்கி ஒரே அரை விட்டாள் விஜி.

"எதுக்கு டி" என்று அதிர்ச்சியில் கேட்டாள் காயத்ரி.

"சாகறாளாம், வாழ்ந்து காட்டணும் டி" என்றாள் விஜி.

"சரி நீ வண்டிய எடு..." என்றாள் காயத்ரி.

பேசாமல் வண்டியை ஓட்டினாள் விஜி.

"ஏன் டி பேசாம வர" என்றாள் காயத்ரி.

"ம்ம்ம், மூடிட்டு வா, நான் செம்ம கோவத்துல இருக்கேன்" என்றாள் விஜி.

இவள் கோவத்தை எப்படி அடக்கறது என்று யோசித்த காயத்ரி சற்று நேர மௌனத்திற்கு பிறகு,"அது எல்லாம் இருக்கட்டும் விஜி, துப்பட்டா போடாமல் அவ்ளோ க்ளாமராவா இருக்கேன் நான்? அவ்ளோ ஒரு ஸ்ட்ரக்ச்சர் இல்லையே எனக்கு.....இல்ல? அவன் சரியான குருட்டுப்பய டி" என்றாள் காயத்ரி.

சிரித்துவிட்டாள் விஜி.

"அப்பாடா, கோவம் போயிருச்சா" என்றாள் காயத்ரி.

வீடு வந்து சேர்ந்தனர் இருவரும். விஜியை வீட்டில் விட்டுவிட்டு காயத்ரி கிளம்பினாள்.

வீட்டில் விஜியின் தந்தை வந்திருந்தார். அனால் இன்றும் போதையில் இருந்தார்.

"விஜி வந்துட்டா, என்னை கடைசி வரைக்கும் காஞ்சி ஊத்தி காப்பாத்துவா, நீ வேணாம், ரம்யா வேணாம், நீ வாடி செல்லம்" என்று விஜியை போதையில் அழைத்தார் விஜியின் தந்தை.

"அப்பா, இன்னிக்குமா அப்பா, எனக்கு சுத்தமா பிடிக்கலப்பா, வீட்ல எல்லாரும் லேடிசா இருக்கோம், பக்கத்துல இருக்கறவங்க எல்லாரும் ஒரு மாதிரி பேசறாங்கப்பா" என்றாள் விஜி.

"என்ன டா பேசறாங்க, சொல்லு, நான் போலீஸ் டா, அவங்கள உண்டு இல்லன்னு ஆகிருவோம், சொல்லு, யாரு சொன்னா, என்ன சொன்னா, என் விஜி செல்லம் மனசு கஷ்டபட்ரா மாதிரி யாரு சொன்னா சொல்லு" என்று உளறல் கலந்த பேச்சில் கூறினார் விஜியின் தந்தை.

"விஜி, நீ உள்ள போ, பொய் படி, இல்லன்னா தூங்கு" என்று சமயலறையில் இருந்து குரல் கொடுத்தாள் புவனா.

விஜி அவளது அறையில் செண்டு தாழிட்டு கொண்டாள். உள்ளே ரம்யாவும் இருந்தாள்.

"அக்கா, அப்பா எப்போ தான் மாறுவார்" என்றாள் ரம்யா.

"ரம்மி, நீ பேசாம படு" என்றாள் விஜி.

அந்த நேரம் முபாரக்கின் போன் வந்தது.முதலில் கட் செய்தாள். பிறகு கால் வரவில்லை. பத்து நிமிடம் கழித்து விஜி கால் செய்தாள்.

"ஹலோ, அண்ணா சாரி அண்ணா, கொஞ்சம் டென்சன் ல இருந்தேன், அஹ்ட்ட்ன, சொல்லுங்க அண்ணா" என்றாள் விஜி.

"அப்டியாம்மா, நான் வேணும்னா பிறகு கால் பண்ணட்டுமா?" என்றான் முபாரக்.

"இல்லண்ணா, நவ் ஓகே" என்றாள் விஜி.

"என்ன விஜி, அப்பா இன்னிக்கும் தண்ணி அடிச்சுருக்காரா"என்று கேட்டான் முபாரக்.

"ஆமாம் அண்ணா, எப்படி கண்டுபுடிச்சீங்க" என்றாள் விஜி.

"எல்லாம் ஒரு கணக்கு தான் விஜி, நீங்க எங்க செட்டு, உங்களுக்கு ஒண்ணுன்னா அதை உங்க பேச்சு ல இருந்தே புரிஞ்சுக்கணும் இல்லையா" என்றான் முபாரக்.

"அண்ணா, நெஜமாவே நீங்க என்னையும் காயத்ரியையும் அவ்ளோ மதிக்கிறீங்களா அண்ணா?" என்றாள் விஜி.

"என்ன விஜி, இதுல பொய் சொல்ல என்ன இருக்கு, நீங்க நல்ல படிக்கறவங்க, நல்ல திறமையானவங்க, புரிஞ்சுக்கறவங்க, எல்லாத்துக்கும் மேல இறக்க குணம் உள்ளவங்க" என்றான் முபாரக்.

"அண்ணா, நீங்க எவ்ளோ மதிப்பு எங்க மேல வெச்சுருக்கறது ரொம்ப பெருமையா இருக்கு அண்ணா, ஆனா, நாங்க என்னடான்னா, நீங்க எந்த மாதிரி கண்ணோட்டத்துல எங்களை பாக்றீங்கன்னு உங்களுக்கு டெஸ்ட் வெக்கறோம், எங்களை மன்னிச்சுருங்க அண்ணா" என்றாள் விஜி.

"ச்ச ச்ச....அப்டி எல்லாம் பெரிய வார்த்தை கேக்காதீங்க விஜி, உங்கள மன்னிக்கிற அளவுக்கு நீங்க என்ன தப்பு பண்ணீங்க, செந்தில் மாதிரி ஆண்களுக்கு மத்தியில வாழற நீங்க அப்டி திங்க் பண்ணி தான் ஆகணும்" என்றான் முபாரக்.

"அண்ணா சொல்ல மறந்துட்டேன், காயத்ரி அந்த செந்திலை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டா, ஆனா இப்போ ரொம்ப பயமா இருக்கு, அவன் என்ன பண்ணுவானோ" என்றாள் விஜி.

"நீ பயப்படாதம்மா, எல்லாம் சரி பண்ணிடலாம், என் தங்கச்சிங்க நீங்க ரெண்டு பெரும் நிம்மதியா இருப்பீங்க விடுங்க, எங்க உசுரு எல்லாம் எதுக்கு வெச்சுருக்கோம்" என்றான் முபாரக்.

"அண்ணா....இவ்ளோ பாசமா அண்ணா?" என்றாள் விஜி.

"விஜி, எங்க பாசம் நம்ப முடியாது தான், ஆனா எங்களுக்கு எப்படி அதா காட்றதுன்னு தெரியாது, ஆனா எங்களை சார்ந்த யாருக்காவது ஒண்ணுன்னா எங்க உசுரையே கொடுப்போம்." என்றான் முபாரக்.

"அது சரி அண்ணா, நானும் காயத்ரியும் அந்த அளவுக்கு முக்கியமா உங்களுக்கு" என்றாள் விஜி.

"எங்களுக்கு பிரவீன் முக்கியம் விஜி, ப்ரவீனுக்கு உங்க சந்தோசம் முக்கியம், உங்களுக்கு காயத்ரி சந்தோசம் முக்கியம்....இது எல்லாமே இன்டெர்ளிங்கெட். " என்றான் முபாரக்.

"ப்ரவீனுக்கு என் சந்தோசம் ஏன் முக்கியம்" என்றாள் விஜி.

"அவன் அம்மாவே அவங்க உசுர விட்டுட்டு உங்க உசுர காப்பாத்திவிட்டதா நினைக்கிறான்" என்றான் முபாரக்.

விஜியின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர்....

"அண்ணா...என்ன பேசறதுன்னே தெரில....நாங்க செல்பிஷா யோசிச்சோம், நீங்க கொஞ்சம் கூட உங்கள பத்தி யோசிக்காம...நாங்க யாரோ உங்களுக்கு, ஆனா எங்களுக்காக இவ்ளோ பாசம் காட்டறீங்க, எவ்ளோ பெருமையா இருக்கு, உங்க பிரெண்ட்ஸா இருக்கறதுக்கு நாங்க குடுத்து வெச்சுருக்கணும் அண்ணா" என்றாள் விஜி.

"ஆனா விஜி, இதுபோல பிரவீன் கிட்ட டெஸ்ட் எல்லாம் வெக்காதிங்க, அவன் ரொம்ப செண்டிமெண்ட், சட்டுன்னு கோவப்பட்டுடுவான்" என்றான் முபாரக்.

"ம்ம்ம், அண்ணா, கேக்கணும் னு இருந்தேன், எப்படி நீங்க எல்லாத்தையும் நேர்ல பாத்தா மாதிரி சொன்னீங்க" என்றாள் விஜி.

"மனசார பேசி பழகறோம், எங்க மனசுல எந்த ஒரு விகல்பமும் இல்ல, ஈஷா அல்லாஹ், அந்த இறைவன் கிருபையால் எந்த ஒரு பிரச்னையும் இல்ல எங்க நட்புக்குள்ள, ஒரு உயிரை தான் இழந்துட்டோம், இனி எந்த உயிரையும் நாங்க இழக்க மாட்டோம்,யாராலயும் எங்களை பிரிக்கவும் முடியாது, ஒருத்தன் மனச ஒருத்தன் முழுசா புரிஞ்சு நடந்துக்குவோம், நீங்க எனக்கும் ப்ரவீனுக்கும் ஏதாவது ஈகோ இருக்கானு மெசேஜ் ல செக் பண்ணி பாத்தீங்க, ஒண்ணு சொல்றேன் விஜி, என்னைவிட பிரவீன் எல்லா விஷயத்துலயும் பெட்டெர் தான், இதை நான் ஒத்துக்கறதுல எனக்கு என்ன ஈகோ இருக்கு? அவன் என் உயிர். என்னை விட என் உயிர் தானே சிறந்தது, அது மாதிரி தான், ரியாஸ் விஜய் லெனின் ரகு வெற்றி கதிர் ஹரி எல்லாரும். எங்களுக்குள்ள ஈகோ, மனஸ்தாபம், புறம் சொல்றது, ஒருத்தன பத்தி ஒருத்தன் தப்பா பேசறது வேண்டும் இல்ல, இப்போ நாங்க உங்கள அப்டி தான் நினைக்கிறோம், மனசால நீங்க எங்க யாரோட உயிரையாவது எடுக்க சொன்னா எங்க உயிரை விட்டுடுவோம், மனசார யாரோட உயிர் வேணும்னு நீங்க கேட்டா சந்தோஷமா விட்டு தருவோம், என்னிக்காவது ஒருநாள் நீங்க அதா உணருவீங்க விஜி.பட் கண்டிப்பா உங்க மேல நீங்க இப்டி டெஸ்ட் வெச்சீங்கன்னு எனக்கு கோவமே இல்ல, ஆனா, ப்ளீஸ், இப்டி பிரவீன் கிட்ட பேசிறாதிங்க, பிரவீன் மட்டும் இல்ல வேற யாரோ கிட்டயும் பேசிறாதிங்க, உங்கள கெஞ்சி கேட்டுக்கறேன்.....சரி விடுங்க,.....சாப்டீங்களா" என்றான் முபாரக்.

"இல்லேண்ணா, அப்பா புல்லா தண்ணி அடிச்சுருக்காரு, இப்போ சாப்பிட போனா ரொம்ப டார்ச்சர் பண்ணுவாரு, அப்புறம் அம்மா அப்பாக்கு சண்டை வரும், நான் அப்பா தூங்கினதும் சாப்பிடுவேன் அண்ணா" என்றாள் விஜி.

"வேற என்னம்மா...." என்றான் முபாரக்.

"அண்ணா....ஏதோ ஒரு உயிரை இழந்துட்டோம் னு சொன்னீங்களே என்னண்ணா அது? யாரு?" என்றாள் விஜி.

"அதுவாம்மா, ஒருநாள் நாங்க எல்லாரும் கடல் ல குளிச்சுட்டு இருந்தோம், அப்போ எங்க டீம் ல சார்லஸ் னு ஒரு பிரென்ட் இருந்தான்.என்னோட க்ளாஸ் மேட். ரியாஸ் கு ரொம்ப க்ளோஸ். அன்னிக்கு அவனோட பர்த்டே. பீச் ல குளிச்சுட்டு எல்லாரும் வீட்டுக்கு திரும்பி வந்துட்டு இருந்தோம், நான், விஜய், லெனின், பிரவீன், ஹரி அஞ்சு பெரும் கார் ல வந்தோம், ரியாஸும் ரகுவும் ரியாஸோட வண்டி ல வந்தாங்க, சார்லஸ் தனி வண்டி ல வந்தான், வெற்றியும் கதிரும் அவங்க வண்டி ல வந்தாங்க, வண்ணாரப்பேட்டை முக்குல வரும்போது நாங்க கார் ல எல்லாரையும் முன்னாடி விட்டுட்டு பின்னாடி போயிட்டு இருந்தோம், வெற்றி அண்ட் கதிர் எங்களுக்கு சைட் ல பொறுமையா வந்தாங்க, ரியாஸ் அண்ட் ரகு தான் வேகமா முன்னாடி போனாங்க, ரியாஸ் எப்பவுமே வேகமா தான் போவான், அப்போ, இவங்க போன ஸ்பீட் ல வண்டி கண்ட்ரோல் இழந்து ஜஸ்ட் மிஸ் ஆனாங்க ஒரு எடத்துல, அப்படியும் ஸ்பீட் கொறைக்கல, தாசில்தார் ஆபீஸ் கூட்ரோட்ல நாங்க ஸ்டேடியம் ரோடு ல திரும்பணும், அந்த நேரம் ஆப்போசிட்ல ஒரு மினி லாரி வேகமா வந்துச்சு, ஒரு செகண்ட் தான், நாங்க ரியாஸ் அண்ட் ரகு போய்ட்டாங்கன்னே நெனச்சோம், ஜஸ்ட் மிஸ் ஆகி சைட் ல இருந்த சாக்கடை ல விழுந்துட்டாங்க ரெண்டு பேரும். அப்பாடா, நல்லவேளையா உயிரு போகல னு அவங்கள திட்டிகிட்டே சாக்கடை ல இருந்து டூக்கினோம், என்னடா நல்லா அடி பட்டிருக்கு, தலை ல ரத்தம் வருது னு அந்த லாரி காரண திட்டிட்டு சண்டை போட்டுட்டு இருந்தோம், அப்போ ரியாஸ் சொன்னான், டேய் என்னை விடுங்க டா, சார்லஸ் எங்கடா ன்னு கேட்டான், நிலை தடுமாறி வந்தா லாரிக்கு கீழ எங்க சார்லஸ்.....உசுரு மட்டும் தான் இருந்துச்சு, தலை ல ரத்த ஆறு, இடுப்புக்கு கீழ ஒண்ணுமே இல்ல, கூழா போய் இருந்துச்சு, ஐயோ னு அலறிட்டு லாரியை ரிவேர்ஸ் எடுக்க சொல்லிட்டு ஆம்புலன்ஸ் கு போன் பண்ணோம், என்ன மச்சான், நீ எப்படி டா மாட்டினா, டேய், என்ன டா, னு அலறினோம், அதுக்கு சார்லஸ் பேச முடியாம சொன்னான், ரியாஸ் என் உயிர் நண்பன் டா, ரகு......அவன் தங்கச்சி ரெண்டு பேருக்கும் அவன் தான டா ஆதரவு.....நான் என்ன டா, என் அப்பா அம்மாவுக்கு மூணாவது பையன். நான் இல்லனாலும் அவங்க இருப்பாங்க டா....அவங்கள காப்பாத்திடனும் னு தான் மனசுல இருந்துச்சு டா, எனக்கு ஒண்ணுன்னா நீங்களும் இப்படி தான டா காப்பாத்திருப்பீங்க.....அந்த வார்த்தை தான் அவனோட கடைசி வார்த்தை. பிறந்த நாள் அன்னிக்கே அவனோட இறந்த நாள். என்னோட கை ல தான் அவனோட உயிர் போச்சு. நட்புன்னா என்ன. எங்க பிணைப்புன்னா என்ன ன்னு அன்னிக்கு எங்க மனசுல ஆணி மாதிரி அடிச்சுட்டான் எங்க சார்லஸ்." அழுதுவிட்டான் முபாரக்.

"அண்ணா....அழாதீங்க அண்ணா, சாரி" என்றாள் விஜி.

அங்கே காயத்ரி வீட்டில்......

பிரவீன் காயத்ரியுடன் போனில் உரையாடல்....

"என்ன காயத்ரி, நல்ல இருக்கீங்களா, விஜி எப்படி இருக்காங்க" என்றான் பிரவீன்.

"எல்லாரும் ஓகே, நான் தான் அப்செட்" என்றாள் காயத்ரி.

"ஏன், என்ன ஆகி, திருப்பி அந்த செந்தில் ஆஹ்" என்றான் பிரவீன்.

"ஆமாம், முபாரக் அண்ணா சொன்ன மாதிரியே எங்க காலேஜ்லயே கன்பார்ம் ஆயிட்டான், ரொம்ப அசிங்கமா நடந்துக்கறான் அண்ணா" என்று அழத்தொடங்கினாள் காயத்ரி.

"காயத்ரி, நீங்க அழுதா வீட்ல எல்லாரும் பாப்பாங்க, அப்புறம் நீங்க காரணம் சொல்ல வேண்டி இருக்கும், எல்லாம் சீக்கிரம் சரி ஆய்டும் காயத்ரி, நானும் முபாரக்கும் விஜய் அண்ட் ரியாஸும் கட்டம் கட்டிட்டு இருக்கோம், ஜஸ்ட் ஒன் வீக், எல்லாம் ஓகே ஆய்டும்" என்றான் பிரவீன்.

"அண்ணா, இன்னிக்கு நான் ரொம்ப வயலெண்டா அவனோட சத்தம் போட்டுட்டேன், அதான் ரொம்ப பயமா இருக்கு" என்றாள் காயத்ரி.

"விடும்மா, எல்லாம் முபாரக் பாத்துக்குவான், அதான் ப்ராமிஸ் பண்ணான் இல்ல" என்றான் பிரவீன்.

"என்ன ப்ராமிஸ் பண்ணாரு, சும்மா சொன்னாரு அண்ணா, அவரால என்ன முடியும்?" என்றாள் காயத்ரி.

சட்டென வந்த கோவத்தை அடக்கிக்கொண்டு," காயத்ரி அப்டி எல்லாம் சொல்லாதீங்க, அவன் தேவை இல்லாம எதுக்கு உங்களுக்கு ப்ராமிஸ் பண்ணனும், அவன் உங்கள ஒரு நல்ல சிஸ்டரா நினைக்கிறான், என்கிட்டே கேட்ட மாதிரி அவன்கிட்ட கேட்றாதீங்க, ரொம்ப கஷ்டப்படுவான்.பாவம்" என்றான் பிரவீன்.

"இல்லேண்ணா, லாஜிக்கா சொல்லுங்க, அவரால எனக்கு எப்படி ஹெல்ப் பண்ண முடியும்? அது மட்டும் இல்ல, அவரு ஒரே நாள் ல எப்படி என்னை ஒரு சிஸ்டரா நெனைக்க முடியும்" என்றாள் காயத்ரி.

"இல்ல காயத்ரி, முபாரக் ரொம்ப இளகின மனசு, சின்ன வயசுல ரொம்ப கஷ்ட பட்டு சாப்பாடுக்கு கூட வழி இல்லாம, ராப்பகலா அவங்க அப்பாவும் அவனும் சங்கு ல பாலிஷ் போட்டு விடிய விடிய பெயிண்ட் பண்ணி கொஞ்சம் கொஞ்சமா வளைந்து இந்த நிலைமைக்கு வந்தவன், அவங்க அப்பாவே ரொம்ப இளகினவரு. அதான், கஷ்டபட்ரா யாரை பாத்தாலும் அவன் உடனே என்ன ஏதுன்னு யோசிக்காம உதவி பண்ணுவான், அவங்கள அவன் குடும்பத்துல ஒரு ஆளாவே நினைப்பான், நீங்க பாத்தீங்க இல்ல, ரகு,ரொம்ப கஷ்டத்துல அப்பா அம்மா வாங்கின கடன் ல அவன் வீடு எல்லாம் போய் திருவண்ணாமலை ல இருந்து நாடோடியா இங்க வந்தான் கைல ரெண்டு வயசுக்கு வந்தா தங்கச்சியோட, என்ன ஏதுன்னு கேக்கல, நல்லவனா கெட்டவனான்னு பாக்கல, கஷ்டத்துல இருக்கறவன்...பசிக்கு வந்தவன் கண்டிப்பா பகையாளியா ஆகமாட்டான் னு சொல்லி அவனுக்கு தங்க ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அவன் தங்கைகளை காலேஜ் ல படிக்க வெச்சு அவனுக்கும் தன்னோட சங்கு குடோன் ல வேலை குடுத்துருக்கான். இந்த வெற்றி கதிர் பாத்தீங்களே, அவங்களும் அப்டி தான்...எங்கயோ இருந்து பஞ்சம் பொழைக்க வந்தவங்க, ஒருநாள் இவன் வண்டி ஏதோ மக்கர் பண்ணிருச்சு, இவங்க தான் ரெடி பண்ணிருக்கானுங்க, யாரு நீங்க உங்கள இங்க நான் பாத்ததில்லையே ன்னு கேட்ருக்கான், அவனுங்களும் நாங்க அனாதை சார், பொழப்பு தேடி வந்தோம், மூட்டைதூக்க கூட வேலை கிடைக்கல னு சொல்லிருக்காங்க, சாப்டீங்களானு கேட்ருக்கான், இல்லன்னு சொல்லிருக்கானுங்க, சரி, வண்டி சரி பண்ணதுக்கு எவ்ளோ காசுன்னு கேட்ருக்கான், காசு எல்லாம் வேணாம், ஒரு டீயும் ரெண்டு பன்னும் வாங்கி குடுங்க போதும், பசி ல கண்ணு இருட்டுதுன்னு சொல்லிருக்கானுங்க, அப்போ அவன்கிட்ட இருந்த முன்னூறு ரூபாய் குடுத்துட்டு போயிருக்கான், மறுநாள் அந்த இடத்துல அவங்களுக்கு மெக்கானிக் கடை........அவன் எல்லாரையும் உடனே நம்பிடுவான் காயத்ரி.அவன்கிட்ட ஏதும் இப்டி பேசிறாதீங்க, ஒடஞ்சு போயிருவான்" என்றான் பிரவீன்.

"என்ன இருந்தாலும் உங்களைப்போல வருமா பிரவீன் அண்ணா" என்றாள் காயத்ரி.

"இல்ல காயத்ரி, அவன் என்னை விட ரொம்ப பெரியவன், அவன் எல்லாம் என்கூட கம்பேரே பண்ண முடியாது, அவன் கடல் னா நான் அதுல மெதக்குற காகிதம் அவ்ளோதான், அவன் இல்லேண்ணா நாங்க யாருமே இல்ல, எங்க எல்லாரோட உயிரும் அவன் தான். அது மட்டும் இல்ல, நாங்க எல்லாரும் ஒரே உயிர், இதுல யாரு பெருசு யாரு சிறுசு எல்லாம் இல்ல, உயிர் ஒண்ணு, நாங்க அதுல இதயம் மூளை ரத்தம் எலும்பு நரம்புன்னு பெணைஞ்சு இருக்கோம் காயத்ரி" என்றான் பிரவீன்.

"அண்ணா....என்ன சொல்றதுன்னே தெரில, எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு, இப்டி ஒரு பிரெண்ட்ஸ் சர்க்கிள் ல இருக்க, ஒருத்தவங்களுக்கு ஒருத்தவங்க விட்டுகுடுக்காம......புரிஞ்சுகிட்டு......கிரேட் அண்ணா...." என்றாள் காயத்ரி.

"நீங்களும் எங்க பிரென்ட் தான் காயத்ரி" என்றான் பிரவீன் சிரித்துக்கொண்டே.

"சரி அண்ணா, நான் நாளைக்கு பேசறேன், பை அண்ணா" என்றாள் காயத்ரி.

"ம்ம்ம். குட் நைட் காயத்ரி" என்று போனை வைத்தான் பிரவீன்.

அவனது போனில் விஜய்யிடம் இருந்து ௨ மெசேஜ் வந்திருந்தது.

"மிஸ் யூ பிரவீன், பீல் லைக் சீயிங் யு" என்று ஒரு மெசேஜ்.

"தூங்கிட்டிங்களா....ஆம் ஐ டிஸ்டர்பிங் யு" என்று இரண்டாவது மெசேஜ்.

"இல்ல இல்ல, ஜஸ்ட் காயத்ரி பேசிட்டு இருந்தாங்க, சொல்லுங்க விஜி, ஐ டூ மிஸ்ஸிங் யு, தாராளா மீட் பண்ணலாம், எப்பன்னு மட்டும் சொல்லுங்க" என்று மெசேஜ் போட்டான் பிரவீன்.

"பிரவீன்...அப்பா ஹியர். மெசேஜ் யூ ஆப்டர் சம் டைம்" என்று மெசேஜ் அனுப்பினாள் விஜி.

பிரவீன் எந்த பதிலும் அனுப்பவில்லை. நீண்ட நேரத்துக்கு பின், "அப்பா ஜஸ்ட் ஸ்லேப்ட்" என்று மெசேஜ் அனுப்பினாள் விஜி.

"ம்ம், சொல்லுங்க விஜி" என்று பிரவீன் பதில் கொடுத்தான்.

"காயத்ரி கிட்ட என்ன இவ்ளோ நேரம் பேசினீங்க" என்று கேட்டாள் விஜி.

"சாதாரணமா தான் பேசிட்டு இருந்தோம், உங்களுக்கு கால் பண்ணேன் பிசியா இருந்துச்சு அதான்" என்றான் பிரவீன்.

"அப்டியா..சாப்டாச்சா" என்றாள் விஜி.

"ஆச்சு, நீங்க" என்றான் பிரவீன்.

"அப்பா புல் தண்ணி ல இருக்காரு, இப்போ தான் தூங்கினார், இனிமே தான் சாப்பிடணும், ஆனா ரம்யா தான் பாவம், சாப்பிடாமையே தூங்கிட்டா" என்று பதில் அளித்தாள் விஜி.

"உங்க அப்பா தண்ணி அடிக்காம இருந்தா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் இல்ல" என்றான் பிரவீன்.

"ஆமாம், கண்டிப்பா, அவர் தண்ணி மட்டும் அடிக்கலன்னா அவரைப்போல ஒரு அப்பா யாருக்கும் இல்ல" என்றாள் விஜி.

"சரி விஜி, சாப்பிட்டு தூங்குங்க, நானும் தூங்கறேன், பை" என்று மெசேஜ் அனுப்பினான் பிரவீன்.

"பை பிரவீன். டேக் கேர்" என்று பதில் விஜியிடம் இருந்து வந்தது.

பகுதி 29 முடிந்தது.

---------------தொடரும்----------------

எழுதியவர் : ஜெயராமன் (10-Sep-17, 10:57 pm)
சேர்த்தது : நிழலின் குரல்
பார்வை : 371

மேலே