கவிதை திருவிழா- இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

தொலைத்த வழிகள் தவித்து தேட,
வெட்டிய மரக்கிளை துளிர்க்க,
இரவு பகலினையுன்ன
பகல் இரவினை கறைக்க,
வழிகளிருந்தும் விழிகள் தடைபோட,
ஆழி வேண்டி நின்றோனுக்கு,
ஒற்றை மழைத்துளி
நீர் வேட் கை தவிர்க்குமா,
பிற பிம்பம் மறைக்காமல்
கண்மணி முழுதும் நிலை த்திருக்க,
நீ வெளித்தள்ளும் மூச்சுக்காற்றே
என் உயிர் காற்றாய் அமைந்திடுமோ,
ஆதவனை அணைக்க விழி இழந்த்தோன் முயற்சிபானேன்.
கரைந்த,கரைகின்ற பொழுதுகள்,
கானாமல் போக காரணம் தேடினேனேயன்றி,
கரையென்ன கூறினேன் தவிர்த்தொதுங்க,
வானம் முழுதும் எண்ணம் முழுவதும்
நிலைத்திருக்க, பேருவுவகை.
தடையென கொள்ளாமல் தவிர்த்திடு,
ஆழியில் கலந்த துளி இனிப்பிற்கு
உவர்ப்பை கவர்வானேன்.
முட்களை புறந்தள்ளி வழி நடந்திடு,
நிழலோடு என்னையும் இணைத்துக்கோண்டு....

எழுதியவர் : கிறிஸ்டாஅறிவு (11-Sep-17, 2:31 pm)
சேர்த்தது : christaarivu
பார்வை : 168

மேலே