கவிதை திருவிழா- உன்னைத்தேடி
தமிழ் பிழையாகும்
மௌனத்தை பதிலில்லையென பொருள் கொண்டால்
இடைவெளியை தூரம் என பொருள் கொண்டால்
அன்பினை ஆசையென பொருள் கொண்டால்
தவிப்பினை வேட்கையென பொருள் கொண்டால்
கண்ணீரை கலக்கம் என பொருள் கொண்டால்
கோபத்தை வெறுப்பு என பொருள் கொண்டால்
இயலாமையை முடிவு என பொருள் கொண்டால்
தமிழ் பிழையாகா.பிழை தமிழாகா
நிழல்களும் நிஜங்களாகலாம்
உதிரத்தில் கலந்த உறவுகள்
கரைவதில்லை,கலைவதுமில்லை
கடலில் தொலைந்தது தக்கையே, ஊசியல்ல
கரை சேரும் , தேடாமலே ...